இராஜகிரிய
வர்த்தக நிலையத்தில்
இன்று அதிகாலை
ஏற்பட்ட தீ
விபத்து தற்போது
கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக
கோட்டை நகர
சபை தீயணைப்பு
பிரிவு அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
எரிவாயு
களஞ்சிய அறை
ஒன்றிலேயே இந்த
தீ விபத்து
இடம்பெற்றுள்ளது. பின்னர் அந்த தீ வர்த்த
நிலையம் வரை
பரவியுள்ளது.
தீயை
கட்டுப்படுத்துவதற்காக கோட்டை நகர
சபையின் 3 தீயணைப்பு
வண்டிகள், தெஹிவளை
- கல்கிசை மாநகர
சபையின் தீயணைப்பு
வண்டி மற்றும்
கொழும்பு தீயணைப்பு
சேவை திணைக்களத்தின்
தீயணைப்பு வண்டி
ஒன்றும் இதற்காக
பயன்படுத்தப்பட்டுள்ளது.
இராஜகிரிய
HSBC கட்டடத்திற்கு அருகில் இந்த
எரிவாயு சிலிண்டர்கள்
களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையம் அமைந்துள்ளது. குறித்த கட்டடத்தின் மின்சார
சுற்றமைப்பில் ஏற்பட்ட கோளாரே இந்த தீ
விபத்து ஏற்பட
காரணம் என
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக
செயற்பட்ட தீயணைப்பு
படைவீரர்கள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துள்ளனர்.
இதன்மூலம் கொழும்பில்
ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment