புதிய
அரசியல் யாப்பொன்று
கொண்டுவரப்படவேண்டும் என்பதை இந்த
நாட்டின் 64 சதவீத மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
இந்த
மக்கள் ஆணையை
நிறைவேற்றுவதில் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி செயல்பட்டுவருகின்றது.
இதனை வேண்டாம்
என்று கூறுபவர்கள்
தொடர்பில் அரசாங்கம்
கவனம் செலுத்தவில்லை.
மக்களின் ஆணையை
நிறைவேற்றுவதிலேயே அரசாங்கம் தீவிரம்
காட்டிவருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர்
கூடத்தில் இடம்பெற்ற
அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை
துணைப்பேச்சாளர்களான அமைச்சர்களான டொக்டர்
ராஜித சேனாரத்ன
மற்றும் தயசிறி
ஜயசேகர ஆகியோர்
வலியுறுத்தினர்.
புதிய அரசியல் யாப்பு
தேவையற்றதென்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளமை
குறித்து செய்தியாளர்
கேட்ட கேள்விக்கு
பதிலளிக்கையிலேயே அமைச்சர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டனர்.
செய்தியாளர்
:
புதிய
அரசியல் யாப்பொன்று
வரப்போவதாகவும் அதற்கு இடமளிக்க போவதில்லை என்று
மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனரே?
அமைச்சர்
டொக்டர் ராஜித
சேனரத்ன :
இந்த
அரசியல் யாப்பு
64 இலட்சம் மக்கள் எமக்களித்த மக்கள் ஆணைக்கமைவாகவே
அதற்கான நடவடிக்கை
முன்னெடுக்கப்படுகின்றது. இந்த மக்கள்
ஆணையின் அடிப்படையிலேயே
நாம் செயற்படுகின்றோம்.
செய்தியாளர்
:
கூட்டு
எதிர்க்கட்சியினர் இதற்கு உடன்படுவதில்லை
என்று தெரிவித்தனர்
அமைச்சர்
தயசிறி ஜயசேகர
:
இவ்வாறான
கோஷங்களினால் தான் நாட்டுக்கு இந்த நிலை
ஏற்பட்டது. எதிர்க்கட்சி ஐக்கியதேசியக்கட்சிகளுடன்
இது குறித்து
நாம் பேச்சு
வார்த்தை நடத்துகின்றோம்.
பொது உடன்பாடு
காணவேண்டும் என்பதே நோக்கமாகும்.
யுத்தத்தின்
பின்னர் தமிழ்
மக்களுக்கு தமது பிரச்சினை தொடர்பில் பாரிய
மனஅழுத்தம் உண்டு. தமது பிரச்சினைக்கு உரிய
தீர்வு காணப்படவேண்டும்
என்பதே அவர்களது
உள்ளக்கிடக்காகும். இதே போன்று
முஸ்லீம் மக்களுக்கும்
இதே மனவேதனை
உண்டு. வடக்கு
கிழக்கில் வாழும்
சிங்கள மக்கள்
மத்தியிலும் இவ்வாறான நிலைமை உண்டு.
இறைமை
மதங்களுக்கான உரிமை உள்ளிட்ட விடயங்களில் கூடிய
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டை
சுபீட்சம் மிக்கதாக
முன்னெடுப்பதற்காகவே புதிய அரசியல்
யாப்பு தொடர்பில்
அனைவரும் கவனம்
செலுத்தியுள்ளனர். நாடு முன்னோக்கி
பயணிக்கவேண்டும். மீண்டும் 2500 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தக்கூடாது.
அதிகாரங்கள் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.
ரிஎன்ஏ
உள்ளிட்ட அனைத்து
தரப்பினருடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். மக்கள்
பிரதிநிதி என்ற
ரீதியில் விரிவான
கருத்து பரிமாறல்களுடன்
பொருத்தமான அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதற்கு நாம்
கடமைப்பட்டுள்ளோம்.
இந்த
விடயங்கள் குறித்து
பேசும் இடம்தான்
அரசியல் பேரவையாகும்.
இங்கு தான்
இவற்றை பேசவேண்டும்.
இங்கு பேசுபவற்றுக்கு
உடன்படுகின்றனர். இங்கு பேசுபவற்றை வெளியில் வந்து
திரிபு படுத்துவது
அநாகரீகமாகும். இந்த சபையில் பல்வேறு பட்ட
கருத்துக்கள் உண்டு இது இறுதி முடிவல்ல.
அரசியல் யாப்பு
விடயத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை பேச்சுவார்த்தை
மட்டத்திலேயே உண்டு. கட்சிகளின் மத்தியில் பல்வேறு
கருத்துக்கள் உண்டு. இந்த கருத்துக்களை விகாரைகளிலும்
வேறு இடங்களிலும்
விமர்சிப்பது பொருத்தமானது அல்ல. இவ்வாறான சம்பவங்கள்
தொடர்ச்சியாக இடம்பெற்றவந்தன. 2000ம் ஆண்டிலும் புதிய
அரசியல் யாப்பு
கொண்டுவரப்பட்டது. அது தீயிட்டு
கொழுத்தப்பட்டது. மக்களின் கருத்தை ஒன்றிணைப்பது அரசியல்
பேரவையில் மேற்கொள்ளப்படும்
பேச்சுவார்த்தையின் மூலமே ஆகும்.
இதனை சீரழிக்கவேண்டாம்.
அரசியல் யாப்பு
ஒன்றை அமைப்பது
தனிப்பட்ட கட்சிக்கு
உட்பட்ட விடயமல்ல.
அமைச்சர்
டொக்டர் ராஜித
சோரத்ன:
மக்கள்
விரும்பும் அரசியல் யாப்பொன்றை இப்பொழுது வேண்டாம்
என்று சிலர்
கூறுகின்றனர். இவர்களின் கருத்து என்னவென்று நமக்கு
புரியவில்லை. அதிகாரம் பகிரப்பட்டபோது அனைவரும் கூக்குரல்
எழுப்பினர்.
ஜனாதிபதி
பாராளுமன்றத்தின் கருத்தையும் அறிந்து பொதுமக்களின் கருத்தையும்
அறிந்து இதனை
முன்னெடுக்கவுள்ளார். புதிய அரசியல்
யாப்பின் அவசியத்தை
கடந்த பொதுத்தேர்தலிலும்
ஜனாதிபதி தேர்தலிலும்
வாக்களித்த பெரும்பாண்மை மக்களும் பௌத்த மத
பிக்குகள் மத
குருமார்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர் என்றும் ராஜித
சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின்
அதிகாரங்களை மக்களுக்கு வழங்குவதற்கே புதிய அரசியல்
யாப்பு தயாரிக்கப்படுகின்றது.
இதில் ஒரு
தரப்பு வேண்டாம்
என்கின்றனர். இவர்கள் மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பவர்களா?
1958ம் ஆண்டு தந்தை கிளித்தெறிந்த
அரசியல் யாப்பு
திருத்தத்தை அவரது மகளான முன்னாள் ஜனாதிபதி
திருமதி சந்திரிக்கா
பண்டாரநாயக்க குமாரதுங்க 1998ம் ஆண்டு அந்த
ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த
தமிழ்மொழியை அரச மொழியாக்கினார்.
1972ம் ஆண்டு மக்களின்
விருப்பம் அறியப்படாமல்
புதிய அரசியல்
யாப்பு தயாரிக்கப்பட்டது.
இது அப்பொழுதிருந்த
பிரதமர் திருமதி
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின்
அதிகாரத்தை அதிகரித்துக்கொள்வதற்கே ஆகும்.
1977ம் ஆண்டு காலப்பகுதியில் ஆறில்
ஐந்து பெரும்பாண்மையுடன்
முன்னாள் ஜனாதிபதி
ஜே ஆர்
ஜெயவர்த்தன புதிய அரசியல் யாப்பை கொண்டுவந்ததார்.
இதுவும் அவரது
அதிகாரத்தை அதிகரித்துக்கொள்வதற்கே ஆகும்.
முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ
அரசியல் யாப்பில்
18வது திருத்தத்தை
மக்களின் விருப்பத்தை
அறியாது கொண்டுவந்தார்.
மூன்றில்
2 பெரும்பாண்மையுடன் நிறைவேற்றி தனது
அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டார். இவ்வாறு
அதிகாரம் அதிகரிக்கப்பட்ட
இந்த அரசியல்
யாப்பின் மூலம்
அதன் அதிகாரங்களை
மக்களுக்கு வழங்குவது தவறா. இதனை ஏன்
எதிர்க்கின்றார்கள் .மாகாணசபை 13வது
அரசியல் யாப்பின்
கீழ் கொண்டுவரப்பட்டது.இதனை அன்று
எதிர்த்தவர்கள் இன்று சபையிலிருந்துகொண்டு தாம்தான் மாகாணசபையை
நிர்வகிக்கும் றிமோட்கொன்றோல் என்று தீர்மானிக்கின்றனர். மாகாணசபை முறையை அமுலுக்கு கொண்டுவந்த
பொழுது பலரை
கொலை செய்தனர்
. நாட்டுக்கு கேடானது என்று விமர்சித்தனர். இன்று
மாகாண சபைகளில்
இருந்துகொண்டு செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.
பொதுமக்களின்
கருத்தறியும் சர்வஜெனவாக்கெடுப்பு சிறப்பானதாகும்
இது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின்
அரசியலமைப்பில் இருந்த விசேட அம்சமாகும். இதன்
மூலம் மக்களின்
கருத்தை அறியவுள்ளோம்.
எதிர்க்கட்சி
தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த
விடயத்தில் பெருந்தன்மையுடனேயே நடக்கின்றார்.
பெரும்பாண்மை சிங்களமக்கள் ஏற்றுக்கொள்ளாத
தீர்வை அவர்
விரும்பவில்லை . பெரும்பாண்மை சிங்களமக்களின்
விரும்பத்துடனான அரசியல் தீர்வையே அவர் விரும்புகின்றார்.அவரது ஜனாநாயக
சிறப்பம்சத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
0 comments:
Post a Comment