சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகவும், மாவட்டப் பதிவாளராகவும்
கடந்த 10 வருடங்கள் மகத்தான மக்கள் பணியாற்றி கடந்த 2016.12.01 ஆம் திகதி முதல்
சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளராக
பதவி உயர்வு பெற்றுச் சென்ற அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கு சாய்ந்தமருது
பிரதேச செயலக விவாக, பிறப்பு, இறப்பு பதிவாளர்களின் ஒன்றியத்தினால்
மகிழ்ச்சியுடனான ஒன்று கூடல் இன்று 2017.07.06 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
விவாகப் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை தலைமையில்
இடம்பெற்ற இந்த ஒன்று கூடல் பிறப்பு, இறப்பு பதிவாளர் எம்.ஐ.எம்.றஹீம்
ஓதிய கிராஅத்துடன் ஆரம்பமானது.
விவாகப் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒன்றியத்தின் செயலாளர் எம்.எஸ்.
றெளசூக் இங்கு வரவேற்புரை நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக மாவட்டப்
பதிவாளர் எம்.ஏ. ஜமால் முஹம்மத் ஆகியோர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை வாழ்த்திப்
பேசினார்கள்.
விவாகப் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒன்றியத்தின் உப செயலாளர்
எம்.ஐ.செயினுலாப்தீன் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம்
அவர்களை வாழ்த்தி வாழ்த்து பத்திரம் வாசித்தார்.
சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம் ஏற்புரை நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.நூர்தீன்
நன்றி உரை நிகழ்த்தினார்.
இவ்வைபவத்தில் உதவி பிரதேச செயலாளர் எப்.எம். றிக்காஸ், அதிகாரமளிக்கப்பட்ட
உத்தியோகத்தர் எம்.ரி ஏ. வாஹித், ADR எம்.ஐ.ஜமால்
முஹம்மத் ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment