தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பொன்றை சர்வமத பிரதிநிதிகள் மேற்கொண்டனர்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியாழக்கிழமை (06) இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகாலத்தில் தோன்றியுள்ள இன ரீதியான முறுகல் நிலையை கட்டுப்படுத்துவதும், தேசிய ரீதியில் சகவாழ்வினை உறுதிசெய்வதும் இதற்காக  அரசியல் வாதிகளும், மதத்தலைவர்களும் இணைந்து தேசிய ஒற்றுமைக்காக புரிந்துணர்வுடன் எவ்வாறு செயற்படுவது என்பன தொடர்பில் ஆராயப்பட்டது.

-          Firows Mohamed AJ
Journalist




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top