அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் வறிய மக்களுக்கான 1000ம் இலவச மூக்குக் கண்ணாடிகள் என்னும் திட்டத்திற்கமைவாக இன்ஷா அல்லாஹ் நாளை 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் மக்களுக்காக 125 மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான கண் பரிசோதனைகள் இடம் பெற உள்ளது. ஏற்கனவே முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களை பிரதினித்துவப்படுத்தி 500 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது, முறையே மூன்றாம் கட்டமாக பாலமுனையில் 150 பேருக்கு (02.07.2017) நடைபெற்றது. அதன் நான்காம் கட்டமாக இன்ஷா அல்லாஹ் நாளை 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் மக்களுக்காக 125மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான கண் பரிசோதனைகள் இடம் பெற உள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top