அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின்
வேண்டுகோளுக்கமைய ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் 4200,000 அமெரிக்க டொலர் செலவில் UN
- HABITAT நிறுவனத்தின் ஊடாக மன்னார்
கூழாங்குளம் அரச முஸ்லிம் கலவன் பாடசாலையில்
நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன்
கூடிய வகுப்பறைக்
கட்டிடத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக
அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் கலந்து கொண்டார்.
பாடசாலை
அதிபர் அரபாத்
தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,
UN-HABITAT நிறுவனத்தின் பிரதிநிதி ஹியுக்கோ
மெட்சுவோ, அமைச்சின்
இணைப்புச் செயலாளர்
அலிகான் ஷரீப்
உட்பட பலர்
கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment