உலகக் கிண்ண கால்பந்தில்
அடிக்கப்பட்ட மொத்த கோல்கள்
   


ரஷியாவில் நேற்றுடன் முடிவடைந்த உலக கிண்ண கால்பந்து போட்டியில். மொத்தமாக நடந்த 46 ஆட்டத்தில் 169 கோல்கள் அடிக்கப்பட்டன. ஒரு ஆட்டத்துக்கான சராசரி கோல் 2.64 ஆகும். இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்துதங்க ஷூவை பெற்றார்.
உலக கிண்ணப் போட்டியில் 3 கோல்களுக்கு மேல் அடித்த வீரர்கள் விவரம்:-
6 கோல்: ஹாரிகேன் (இங்கிலாந்து).
4 கோல்: கிரீஸ்மேன், எம்பாப்வே (பிரான்ஸ்), லுகாகு (பெல்ஜியம்), டெனிஸ் செர்ஷேவ் (ரஷியா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்).
3 கோல்: பெர்சிச் மெண்டு கிச் (குரோஷியா), ஈடன் ஹசாட் (பெல்ஜியம்), ஆர்டம் டிசுயபா (ரஷியா), யெரிமினா (கொலம்பியா) எடின்சன் கவானி (உருகுவே), டியாகோ கோஸ்டா (ஸ்பெயின்).
நெய்மர் (பிரேசில்), மோட்ரிச் (குரோஷியா) உள்ளிட்ட 13 வீரர்கள் தலா 2 கோலும், மெஸ்சி உள்ளிட்ட 84 வீரர்கள் தலா 1 கோலும் அடித்துள்ளனர்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் 12 சுயகோல்கள் (சேம்சைடு) விழுந்துள்ளன. இது ஒரு மோசமான நிகழ்வாகும். 1998-ல் 6 சுயகோல்கள் விழுந்ததே சாதனையாக இருந்தது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top