கண்டி கலவரத்தின் பிரதான சந்தேக நபர் எனக் கருதப்படும்
அமித் வீரசிங்க பிணையில் விடுதலையானார்
கண்டி கலவரத்தின் பிரதான சந்தேக நபர் எனக் கருதப்படும் அமித் வீரசிங்க உள்ளிட்ட10 பேருக்கு மேல் நீதி மன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர்கள் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று
அவர்களுக்கு எதிராக தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில்
வழக்கு விசாரணைக்கு
வந்த நிலையில்
அமித் உள்ளிட்ட
10 பேருக்கு 5 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று
சரீர பிணைகள் மற்றும்
5000 ரூபா ரொக்கம்
செலுத்தி
பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல்
நீதிமன்றத்தில் அமித் தரப்பு விண்ணப்பித்த மனுவிற்கு
கடந்த வெள்ளிக்கிழமை
பிணை வழங்கப்பட்டுள்ள
நிலையில் அதற்கான
வழக்கு விசாரணை
இன்று தெல்தெனிய
நீதவான் நீதிமன்றத்தில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
அமித் உள்ளிட்டவர்கள் சற்றுமுன்
பிணையில் வெளியே
சென்றுள்ளனர்.

0 comments:
Post a Comment