பூமியைவிட மிகப்பெரிய
கோள் கெப்ளர்-10 சி
விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மனிதர்கள்
வசிக்கும் இந்த
பூமியை விட
17 மடங்கு எடையுள்ளதும்
இரண்டு மடங்கு
பெரியதுமான கெப்ளர்-10 சி என்ற புதிய
கோள் தற்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோள்
45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு
நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து
இது 560 ஒளி
ஆண்டுகள் தொலைவில்
உள்ளது.
அதாவது,
1 ஒளி ஆண்டு
என்பது சுமார்
6 டிரில்லியன் மைல் தொலைவு ஆகும். இந்த
புதிய கோளின்
சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். பூமியைவிட
பலமடங்கு பெரிய
கோள் கெப்ளர்-10
சி- கோளை
ஹார்வர்டு ஸ்மித்சானியன்
வானியல் பவுதிக
மையத்தை சேர்ந்த
ஆராய்ச்சி விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோள்
தொடர்பான ஆராய்ச்சி
தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment