தமிழக மீனவர்கள் 29 பேர் விடுவிப்பு
தமிழகத்தை
சேர்ந்த மீனவர்கள்
29 பேரை மன்னார்
நீதிமன்றம் விடுதலை செய்தது. முன்னதாக மீனவர்களை
விடுதலை செய்ய
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று உத்தரவிட்டிருந்தார்.
மீனவர்கள் அனைவரும்
மன்னார் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இராமேஸ்வரத்தை
சேர்ந்த 29 மீனவர்களை கடற்படை கடந்த 1ம்
திகதி கைது
செய்து சிறைபிடித்தது.
இதனையடுத்து மீனவர்கள் 29 பேரையும் சிறையில் அடைக்க
மன்னார் நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்தது. மீன்பிடி தடைகாலம்
முடிந்து, 1ம் திகதி இராமேஸ்வரத்தை சேர்ந்த
மீனவர்கள் 29 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.
கடலில்
அவர்கள் மீன்பிடித்துக்
கொண்டிருந்த போது கடற்படை மீனவர்களை சுற்றிவளைத்து
கைது செய்தது.
முன்னதாக பிரதமர்
நரேந்திர மோடி
பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
பங்கேற்க சென்ற
போது தமிழக மீனவர்கள் அனைவரும்
விடுதலை செய்யப்பட்டனர்.
கைது
செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜுன்
16 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற
உத்தரவை அடுத்து
அனுராதபுரம் சிறையில் மீனவர்கள் அடைக்கப்பட்டனர். நேற்று மீனவர்களை விடுவிக்க
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டார். அதனையடுத்து
மீனவர்கள் 29 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment