கோப்பையை வென்றது கொல்கத்தா அணி

பரிசுத் தொகையாக ரூ. 15 கோடி
..
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏழாவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் திறமை மற்றும் அதிர்ஷ்டத்துடன் வெற்றி பெற்று 2ஆவது முறையாக கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
"சிறப்பான தொடக்கம், பாதி வெற்றிக்குச் சமம்' என்ற பழமொழி பஞ்சாபுக்கு இத்தொடரில் பொருந்தவில்லை. இத்தொடரில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வந்த பஞ்சாபுக்கு முதலாவது தகுதிச்சுற்றும், இறுதிச்சுற்றும் கைகொடுக்கவில்லை. அதனால், முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை அந்த அணி இழந்தது.
பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் நிர்ணயித்த 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை, 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா எட்டியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 2ஆவது தகுதிச்சுற்றில் சதம் அடித்து தோனியின் சென்னை அணியை வெளியேற்றிய சேவாக், இம்முறை 7 ஓட்டங்களிலும், பெய்லி 1 ஓட்டத்தோடும் பெவிலியன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை மனன் வோராவும், ரித்திமான் சாஹாவும் தடுத்து நிறுத்தினர்.
3ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ஓட்டங்களை எடுத்தது. வோரா, 52 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
சாஹா சதம்: 29 பந்துகளில் அரை சதம் அடித்திருந்த சாஹா, தனது பேட்டை தொடர்ந்து சுழற்றியதால், 49 பந்துகளில் சதம் அடித்து மட்டையை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காத அவர் 55 பந்துகளில் 115 ரஓட்டங்கள் எடுத்தார்இதில், 8 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும்.
கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும்யாதவ் மற்றும் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பாண்டேவின் நாள்அதிக ஸ்கோரை சேஸ் செய்யும் முயற்சியில் ஷாரூக்கானின் கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்ததுஆனால்முக்கியமான ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பேட் செய்ய வந்த பாண்டேஇந்த நாளை தனக்கான நாளாக உருவாக்கிக் கொண்டார்.
சிறிதும் பதற்றமின்றி காணப்பட்ட அவர்களத்தில் இறங்கியதுமுதல் அதிரடியை வெளிப்படுத்தி வந்தார்.
அவருக்கு பக்க பலமாக விளையாடிய பதான் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்இருப்பினும் தனி ஆளாக அவர் போராடினார்ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அவர் வெளியேற்றப்பட்டார்அவர் 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் (6 சிக்ஸர், 7 பவுண்டரிஎடுத்தார்.
பரபரப்புவெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 15 ஓட்டங்கள் தேவை என்ற பரபரப்பான கட்டம். 19ஆவது ஓவரை வீச ஜான்சன் வந்தார்தனக்கு பெய்லி விடுத்த பணியை அந்த ஓவரின் 5ஆவது பந்து வரை சிறப்பாகச் செய்த ஜான்சன்கடைசி பந்தில் கோட்டை விட்டார்அதனை சாவ்லா சிக்ஸருக்கு விரட்டினார்அப்போதே வெற்றிக் கோட்டை எட்டும் தூரத்துக்கு கொல்கத்தா சென்று விட்டதுகடைசி ஓவரின் 2 பந்துகளில் 1 ஓட்டத்தை மட்டும் விட்டுக் கொடுத்த அவானா, 3-வது பந்தில் பவுண்டரியை அளிக்கவெற்றியை எட்டியது கொல்கத்தா அணி.
தொடரின் தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த கொல்கத்தா அணிதொடரில் கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் தொடர்ந்து வென்றதுஇதுகோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதை நிரூபித்துள்ளதாக அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் பெருமிதத்துடன் தெரிவித்தார்கொல்கத்தா அணிக்கு தொடரின் தொடக்கம் சரிவாக இருந்தாலும்முடிவை அந்த அணி வீரர்கள் சுலபமாக்கினர்.
இத்தொடரில் தனிப்பட்ட நபரின் அதிகபட்சம்
சேவாக் 122
சாஹா 115*
சிம்மன்ஸ் 100*

அதிக ரன்கள்
உத்தப்பா 660
ஸ்மித் 566
மேக்ஸ்வெல் 552

அதிக சிக்ஸர்கள்
மேக்ஸ்வெல் 36
ஸ்மித் 34
யுவராஜ் 28

 அதிக விக்கெட்
மொஹித் சர்மா 23
சுனில் நரைன் 21
புவனேஸ்வர் குமார் 20
 சிறந்த பந்து வீச்சு
ஜடேஜா 4வி/12
பாலாஜி 4வி/13
மொஹித் 4வி/14

 வேகமான சதம்
சாஹா 49 பந்துகள்
(8 சிக்ஸர், 10 பவுண்டரி)
சேவாக் 50 பந்துகள்
(8 சிக்ஸர், 12 பவுண்டரி)
சிம்மன்ஸ் 61 பந்துகள்
(2 சிக்ஸர், 14 பவுண்டரி)

 வேகமான அரை சதம்
பதான் 15 பந்துகள்
(7 சிக்ஸர், 5 பவுண்டரி)
ரெய்னா 16 பந்துகள்
(6 சிக்ஸர், 12 பவுண்டரி)
மில்லர் 19 பந்துகள்
(சிக்ஸர்)
 வேகமான பந்து
ஸ்டெயின் 152.44 கி.மீ/மணி
மோர்கல் 151.34   கி.மீ/மணி
மோர்கல் 151.18   கி.மீ/மணி
பரிசுத் தொகை

கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 15 கோடி பரிசளிக்கப்பட்டது.


Yusuf Pathan poses with the trophy during the final match of the Pepsi Indian Premier League Season 2014 between the Kings Xi Punjab and the Kolkata Knight Riders held at the M. Chinnaswamy Stadium, Bangalore, Indi



Yusuf Pathan poses with the trophy during the final match of the Pepsi Indian Premier League Season 2014 between the Kings Xi Punjab and the Kolkata Knight Riders held at the M. Chinnaswamy Stadium, Bangalore, Indi


Shah Rukh Khan dances after the win during the final match of the Pepsi Indian Premier League Season 2014 between the Kings Xi Punjab and the Kolkata Knight Riders held at the M. Chinnaswamy Stadium, Bangalore, India


Robin Uthappa of the Kolkata Knight Riders and Gautam Gambhir captain of the Kolkata Knight Riders celebrate thew win during the final match of the Pepsi Indian Premier League Season 2014 between the Kings Xi Punjab and the Kolkata Knight Riders held at the M. Chinnaswamy Stadium, Bangalore, India


during the final match of the Pepsi Indian Premier League Season 2014 between the Kings Xi Punjab and the Kolkata Knight Riders held at the M. Chinnaswamy Stadium, Bangalore, India on the 1st June 2014



 
Gautam Gambhir captain of the Kolkata Knight Riders and team mates lift the trophy to celebrate the tournament win during the final match of the Pepsi Indian Premier League Season 2014 between the Kings Xi Punjab and the Kolkata Knight Riders held at the M. Chinnaswamy Stadium, Bangalore, India


Kolkata Knight Riders Co-Owner Shahrukh Khan celebrates with Kolkata Knight Riders as they are crowned Pepsi IPL Champions during the final match of the Pepsi Indian Premier League Season 2014 between the Kings Xi Punjab and the Kolkata Knight Riders held at the M. Chinnaswamy Stadium, Bangalore, India on the 1st June 2014



Kolkata Knight Riders celebrate after being crowned Pepsi IPL Champions during the final match of the Pepsi Indian Premier League Season 2014 between the Kings Xi Punjab and the Kolkata Knight Riders held at the M. Chinnaswamy Stadium, Bangalore, India on the 1st June 2014

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top