பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா
பஞ்சாப்புக்கு எதிரான இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் விருதிமான் சாகா 115(55) ஓட்டங்கள் விளாசினார். வோக்ரா 67(52) ஓட்டங்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் சீசன் 7 தொடரின் சம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்றது.
0 comments:
Post a Comment