ஈராக்கிற்கு 300 இராணுவ ஆலோசகர்கள்
அமெரிக்கா அனுப்புகிறது


ஈராக்கிற்கு 300 இராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்புகிறது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
 ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த.எஸ்..எஸ்.’ தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர்கள், அரசு படைகளை எதிர்த்து தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். மொசூல், திக்ரித், சாதியா, ஜலாலா, தல் அபார் நகரங்களைப் பிடித்து விட்டனர். தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வரும் அவர்கள் பாய்ஜியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை முழுமையாகக் கைப்பற்ற முழுவீச்சில் சண்டையிட்டு வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து வருகிற இந்நிலையில், தீவிரவாதிகள்மீது வான்வழி தாக்குதல் நடத்துமாறு அமெரிக்காவின் உதவியை ஈராக் நேற்று முறைப்படி நாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தீவிரமாக பரிசீலித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 இதனையடுத்து முதல்கட்டமாக ஈராக்கிற்கு 300 இராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்பும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். நிலையை அறிந்து, இலக்கு மற்றும் துல்லியமான         இராணுவ நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராகி வருகிறோம் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top