முன்னறிவிப்பு
முஸ்லிம்களே
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
இன்றைய
ஜும்ஆ தொழுகையின் பின்னர் முஸ்லிம்களைப் போன்று
உடையணிந்து முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டத்தினர் சதி
செய்துவிடக்கூடும்.
பள்ளிவாசலுக்குள்
வந்து தொழுபவா்கள்
போல் நடித்துக்கொண்டு
ஏதாவதொரு அசம்பாவிதத்தை
செய்துவிடலாம். அதனை முஸ்லிம்களின் பக்கம் வைத்து
முஸ்லிம்களை பிரச்சினையில் சிக்கவைப்பதற்கான
ஒரு சதியையும்
வடிவமைக்கலாம். எனவே முன் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியது
அவசியமாகும். எனவே, முஸ்லிகளே அவதானமாகவும் விழிப்பாகவும் இருந்து கொள்ளுங்கள்.
அமைதிப்
போராட்டம் நடாத்தும் மக்கள் விழிப்பாகவும்,
அமைதியான முறையிலும்
பேராட வழிகாட்டுங்கள்.
உங்கள் பக்கத்தில் கறுப்பு ஆடுகள்
என சந்தேகம்
கொள்ளும் படியாக
யாருமிருந்தால், அவதானமாகவும் அடக்கவும் தயாராக இருங்கள்.
இதேவேளை
பொலிஸ்மா அதிபர் இளங்ககோன் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கும்
கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
நாளை
20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள
ஜும்ஆ தொழுகையின்
பின்னர் கலகங்களில்
ஈடுபடும் நோக்கில்
போலியான சில
முஸ்லிம் அமைப்புகளினால்
துண்டு பிரசுரங்களும்,
குறுந்தகவல்களும் மற்றும் பேஸ்புக் மூலம் செய்திகளும்
பிரசாரம் செய்யப்பட்டு
வருகின்றன. எனவே இதனை கருத்தில் கொண்டு
கொழும்பு மற்றும்
அதனை அண்டிய
பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment