சிரியா, ஈராக்
பகுதிகளை இணைத்து
இஸ்லாமிய
நாடு உருவாக்க திட்டமாம்.
ஈராக்கில்
சன்னி பிரிவை
சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள்
ஷியா பிரிவு
அரசுக்கு எதிராக
உள்நாட்டு போரில்
ஈடுபட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக் பகுதிகளை
இணைத்து இஸ்லாமிய
நாடு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
ஈராக்கில்
மொசூல், திக்ரித்
கிர்குக், ஜலாலா
உள்ளிட்ட பல
நகரங்களை தீவிரவாதிகள்
கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
தலைநகர் பாக்தாத்தை
நெருங்கி கொண்டிருக்கின்றனர்.
அவர்களை
தடுத்து நிறுத்தும்
முயற்சியில் ஈராக் அரசு படைகளும் தீவிரமாக
உள்ளன. இதனால்
இருதரப்பினருக்கும் இடையே கடும்
சண்டை நடக்கிறது.
வடக்கு
ஈராக்கில் முன்னேறி
வரும் அவர்கள்
அன்பர் மாகாணத்தில்
மேலும் நான்கு நகரங்களை
நேற்று கைப்பற்றினர்
எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அல்–குயிம், ரவா,
அனா மற்றும்
ஹூசேபா ஆகிய
நகரங்கள் தற்போது
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
அவற்றில்
அல்–குயிம்
நகரம் சிரியாவின்
எல்லையில் உள்ளது.
இந்த நான்கு நகரங்களும்
சிரியாவில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாத்
செல்லும் நெடுஞ்சாலையில்
அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிரியா மற்றும் ஈராக்
பகுதிகளை இணைத்து
இஸ்லாமிய நாடு
ஒன்றை உருவாக்க
திட்டமிட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment