இந்திய மக்களவையில் 543 பேரில் 20 பேர் மாத்திரமே முஸ்லிம்கள்
உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒருவர்கூட இடம் பெறவில்லை.
* இந்தியாவின்
16வது மக்களவையில்
முஸ்லிம்கள் 20 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது கடந்த
தேர்தல்களைவிட மிகவும் குறைவாகும். 80 எம்.பி.க்கள் கொண்ட
உத்தரப் பிரதேசத்திலிருந்து
ஒரு முஸ்லிம்
கூட மக்களவையில்
இடம் பெறவில்லை.
* தற்போதைய
மக்களவையின் 12 எம்.பி.க்கள் 30 வயதுக்கு
உட்பட்டவர்கள். அதே நேரத்தில் மிகவும் வயதானவர்
என்ற பெருமையை
86 வயதாகும் எல்.கே. அத்வானி பெறுகிறார்.
. * மக்களவையின் சபாநாயகராக பாஜகவின் மூத்த
தலைவரும் முன்னாள்
அமைச்சருமான சுமித்ரா மகாஜன் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு அவர்
சபாநாயகரானால், மீரா குமாருக்குப் பிறகு சபாநாயகராகும்
2வது பெண்
என்ற பெருமையை
பெறுகிறார். மேலும் தொடர்ந்து 2 மக்களவைக்கு பெண்களே
சபாநாயகராகப் பணியாற்றிய சிறப்பும் கிடைக்கும்.
* தற்போது
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் 315 பேர் முதல் முறையாக எம்.பி.யாகியுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில்
இது அதிகபட்சமாகும்.
இவர்களில் சிலர்
மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளனர். இருப்பினும் முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
* கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜக 282 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. பாஜக கூட்டணி கட்சிகள் 54 இடங்களில் வென்றன.
* காங்கிரஸ் கட்சி, 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதுவரை நடந்த தேர்தல்களில் அக்கட்சி பெற்ற குறைந்தபட்ச இடங்கள் இதுவாகும்.
* ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்களின் எண்ணிக்கை 349. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது 65 சதவீதம்
0 comments:
Post a Comment