பாலியல் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை தேவை:


                        பான் கீ மூன்                       



உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூனில் இரு சகோதரிகள் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், உலகில் இதுபோன்ற பாலியல் குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பெண்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உள்ளது எனவும்..நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பான் கீ மூன் கூறியிருப்பதாவது:
உலகளவில் நைஜீரியா முதல் பாகிஸ்தான் வரை மற்றும் கலிஃபோர்னியா முதல் இந்தியா வரை கடந்த இரு வாரங்களாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் இரு சகோதரிகள் கூட்டுப் பாலியல் வன்முறையால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. பெண்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உள்ளது.

அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பான் கீ மூன் கூறியுள்ளார். கலிஃபோர்னியாவில் அண்மையில் 3 பெண்களை ஒரு இளைஞர் கொலை செய்த விவகாரம், பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த இளம்பெண் அவரது குடும்பத்தினராலேயே கல்லால் அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் குறித்தும் பான் கீ மூன் வேதனை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top