இன்று 6 ஆம் திகதி
வெள்ளிக்கிழமை
விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும்:
நூல் வெளியீடு
கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது
எழுதிய விபுலாநந்த
அடிகளும் முஸ்லிம்களும்
நூல் வெளியீட்டு
வைபவம் இன்று 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
பிற்பகல் 4.00 மணிக்கு சாய்ந்தமருது பிரதான
வீதியில் உள்ள
கமு/ மழ்ஹறுஸ்
ஸம்ஸ் மஹா
வித்தியாலயத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்
பேரவையின் அம்பாறை
மாவட்டத் தலைவர்
அல்ஹாஜ் டாக்டர்
எம்.ஐ.எம்.ஜெமீல்
இப்புத்தக வெளியீட்டு
வைபவத்திற்கு தலைமை வகிப்பார்.
அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம்
(பிரதேச செயலாளர்,
சாய்ந்தமருது), எஸ்.ஜெகராஜன், (பிரதேச செயலாளர்,
காரைதீவு), அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஐ.மதனி
(அதிபர், கமு/மழ்ஹறுஸ் ஸம்ஸ்
மஹா வித்தியாலயம்,
சாய்ந்தமருது) , எஸ்.தங்கவேல் (செயலாளர், விபுலாநந்த
ஞாபகர்த்த பணி
மன்றம் காரைதீவு),
சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா, ஆகியோர்கள்
உட்பட பல
பிரமுகர்கள் இவ்வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.
இந்நூல் வெளியீட்டு வைபவத்தில்
நூலாசிரியர் குறிப்புரையை கலாபூஷணம் யூ.எல்.ஆதம்பாவும் வெளியீட்டுரையை
விபுலமாமணி வீ.ரி.சகாதேவராஜாவும்
( சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்
பேரவையின் அம்பாறை
மாவட்டச் செயலாளர்
) நிகழ்த்துவார்கள்.
இவ்வைவத்தில் த கோபாலகிருஸ்ணன்,
கவிஞர்
நவாஸ் செளபீ ஆகியோர்களும் நூலை ஆய்வு
செய்து உரை
நிகழ்த்த இருக்கிறார்கள்.
இங்கு சாய்ந்தமருது அபாபீல்கள்
கவீதா வட்டத்தினர்
கவிவாழ்த்துக்களைப் பாடுவார்கள்.
நூலாசிரியர் கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது ஏற்புரை
நிகழ்த்துவார்.
இந்நூல் வெளியீட்டு வைபவத்திற்கான
ஏற்பாடுகளை சமாதானத்திற்கான சமயங்களின்
இலங்கை பேரவையின்
அம்பாறை
மாவட்டக்கிளை செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment