இந்திய மக்களவைக்கு மீண்டும் பெண் தலைவர்!
சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒருமனதாக இன்று தேர்வு...
இந்திய
மக்களவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த
சுமித்ரா மகாஜன்
(வயது71) போட்டியின்றி
தேர்வு செய்யப்படுவது
உறுதியாகியுள்ளது. இன்று ஒருமனதாக
தேர்வு செய்யப்படுகிறார்.மக்களவை சபாநாயகரைத்
தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்க உள்ளது.
அதற்கான மனுக்கள்
தாக்கல் செய்ய
கடைசி நாளான
நேற்று, பிரதமர்
நரேந்திர மோடி
உட்பட 19 மனுக்கள்
சுமித்ரா மகாஜன்
பெயரில் மட்டுமே
தாக்கல் செய்யப்பட்டன.
எதிர்க்கட்சிகள் சார்பிலும் சுமித்ரா பெயரில் மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மற்ற யாருடைய
பெயரிலும் மனுக்கள்
தாக்கல் செய்யப்படாததால்
8வது முறையாக
தொடர்ந்து மக்களவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமித்ரா மகாஜன்
சபாநாயகராவது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து
மக்களவை சபாநாயகராகும்
இரண்டாவது பெண்
என்ற பெருமையை
அவர் பெறுகிறார்.
தொடர்ந்து இரண்டு
மக்களவைக்கு பெண்களே சபாநாயகர் என்ற சிறப்பும்
கிடைக்கிறது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆட்சியின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான
மீரா குமார்,
மக்களவை சபாநாயகராக
இருந்தார்.சுமித்ரா
மகாஜன், மத்தியப்
பிரதேச மாநிலத்தில்
உள்ள இந்தூர்
மக்களவை தொகுதியில்
இருந்து 1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து
8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு
உள்ளார். இந்தூர்
மக்களவை தொகுதியில்
சமீபத்தில் நடந்த தேர்தலில் 4.67 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாஜ்பாய் தலைமையிலான
தேசிய ஜனநாயகக்
கூட்டணி அரசில்
1999 முதல் 2004 வரையில் இணை அமைச்சராக பதவி
வகித்துள்ளார்.
`டாய்‘
(மராத்தியில் மூத்த சகோதரி)
என்று அன்புடன் அழைக்கப்படும் சுமித்ரா மகாஜன்,
மிகவும் சாந்தமானவர்.
அனைத்துக் கட்சியினரின்
மரியாதையைப் பெற்றவர்.
0 comments:
Post a Comment