பிரேசிலில் கோலாகல துவக்க
விழா உலக கால்பந்து திருவிழா
இன்று ஆரம்பம்
ஒலிம்பிக்
போட்டிக்கு அடுத்ததாக பெரும்பான்மையானோரின்
கவனத்தை ஈர்க்கும்
உலகக் கோப்பை
கால்பந்து போட்டி
பிரேசிலின் சா பாலோ நகரில் வியாழக்கிழமை
இன்று தொடங்குகிறது.
32 அணிகள், 64 ஆட்டங்கள், 4 வாரங்கள், 12 மைதானங்களில் நடைபெறும்
இப்போட்டி களை
கட்டியுள்ளது.
முடக்குவாத
நோயால் பாதிக்கப்பட்டு
செயற்கை கால்
பொருத்தப்பட்ட ஒருவர் இந்த வரலாற்று சிறப்பு
மிக்க தொடரை
தொடங்கி வைக்கிறார்.
பொதுவாக
உலகக் கோப்பை
தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தங்கள்
அணிக்கு ஆதரவு
தெரிவித்து பிரேசிலில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும்
அந்நாட்டு தேசியக்
கொடி பறக்க
விடப்பட்டிருக்கும். 1950ஆம் ஆண்டுக்குப்
பின் அரை
நூற்றாண்டு கழித்து தங்கள் சொந்த மண்ணில்
உலகக் கோப்பை
நடைபெறுகிறது. ஆனால், இந்த முறை பிரேசிலியர்கள்
தங்கள் வீடுகளில்
கொடிகளைக் கட்டவில்லை.
அரசுக்கு எதிரான
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள்
ஜன்னல் கதவுகளை
உடைத்து விடக்கூடும்
என்ற அச்சம்தான்
அதற்கான காரணம்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போட்டிக்கு
முன்பாக பிரமாண்ட
கோலாகல துவக்க
விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, சுமார்
600 கலைஞர்கள் கடந்த 1 மாதமாக கடுமயான பயிற்சியில்
ஈடுபட்டுள்ளனர். சுமார் 25 நிமிடங்கள் நடக்க உள்ள
துவக்க விழா
கலை நிகழ்ச்சியில்
பிரேசில் நாட்டின்
இயற்கை வளங்கள்,
மக்களின் வாழ்வோடு
கலந்துள்ள கால்பந்து
போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள், இசை,
நடனம் நடத்தப்பட
உள்ளன.
90 ஆயிரம்
விளக்குகள் அடங்கிய எல்இடி பந்து மூலம்
நடத்தப்படும் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக
கவரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க விழா
நிகழ்ச்சியில் பிபா தலைவர் செப் பிளாட்டர்,
பிரேசில் அதிபர்
தில்மா ரவூப்
உட்பட முக்கிய
தலைவர்கள் கலந்து
கொள்கின்றனர். லீக் சுற்றில் மட்டும் 48 போட்டிகள்
நடத்தப்படுகின்றன. இதைத் தொடர்ந்து
ரவுண்ட் ஆப்
16, கால் இறுதி,
அரை இறுதி,
இறுதிப் போட்டி
நடத்தப்பட உள்ளது.இத்தொடருக்காக பிரேசில்
அரசு பெரும்
தொகையை செலவு
செய்துள்ளது. புதிய மைதானம் அமைப்பது, பாதுகாப்பு
வசதிகள் என
பல ஆயிரம் கோடி
வரை செலவு
செய்துள்ளது. இதனால், உலக கால்பந்து தொடர்
வரலாற்றில் அதிக பொருட் செலவுடன் நடத்தப்படும்
தொடர் எனவும்
இத்தொடர் பெருமையை
பெற்றுள்ளது. அதே நேரத்தில், உலகம் முழுவதும்
ரசிகர்கள் வரவேற்பு
ஒருபுறம் இருந்தாலும்,
உள்ளூர் மக்களின்
எதிர்ப்பும் கிளம்பியிருப்பது அந்நாட்டு
அரசுக்கு நெருக்கடியை
ஏற்படுத்தி உள்ளது.
கால்பந்து
தொடருக்கு செலவு
செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள்,
அந்த தொகையை
நாட்டின் வளர்ச்சி
திட்டத்துக்கு பயன்படுத்த கோரி கடந்த சில
நாட்களாக பல்வேறு
போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், பாதுகாப்பு
ஏற்பாடுகளில் பிரேசில் அரசு அதிக அக்கறை
எடுத்து செய்துள்ளது.
மற்றொருபுறம் முதல் போட்டியிலேயே தங்கள் நாட்டு
அணி ஜெயிக்க
வேண்டுமென்பதற்காக உள்ளூர் ரசிகர்கள்
பிரார்த்தனை செய்து வருகின்றனர். இப்போட்டியில் பிரேசிலின்
இளம் வீரர்
நெய்மரை ரசிகர்கள்
பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இத்தொடரில் அசத்தக் கூடிய வீரராக இவர்
கருதப்படுகிறார். இதனால், குரோஷியாவை பிரேசில் ஜெயித்து
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா
என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்.
போட்டி
அட்டவணை.
1 ஜூன்
13 அதிகாலை 1.30 பிரேசில் - குரோஷியா
2 ஜூன்
13 இரவு 9.30 மெக்ஸிகோ - கேமரூன்
3 ஜூன்
14 அதிகாலை 12.30 ஸ்பெயின் - நெதர்லாந்து
4 ஜூன்
14 அதிகாலை 3.30 சிலி - ஆஸ்திரேலியா
5 ஜூன்
14 இரவு 9.30 கொலம்பியா - கிரேக்கம்
6 ஜூன்
15 அதிகாலை 12.30 உருகுவே - கோஸ்டா ரிகா
7 ஜூன்
15 அதிகாலை 3.30 இங்கிலாந்து - இத்தாலி
8 ஜூன்
15 காலை 6.30 ஐவரி கோஸ்ட் - ஜப்பான்
9 ஜூன்
15 இரவு 9.30 ஸ்விட்சர்லாந்து - ஈகுவேடார்
10 ஜூன்
16 அதிகாலை 12.30 ஃபிரான்ஸ் - ஹோண்டுராஸ்
11 ஜூன்
16 அதிகாலை 3.30 ஆர்ஜெண்டினா - போஸ்னியா
12 ஜூன்
16 இரவு 9.30 ஜெர்மனி - போர்ச்சுகல்
13 ஜூன்
17 அதிகாலை 12.30 ஈரான் - நைஜீரியா
14 ஜூன்
17 அதிகாலை 3.30 கானா - அமெரிக்கா
15 ஜூன்
17 இரவு 9.30 பெல்ஜியம் - அல்ஜீரியா
16 ஜூன்
18 அதிகாலை 12.30 பிரேசில்- மெக்ஸிகோ
17 ஜூன்
18 அதிகாலை 3.30 ரஷியா - தென் கொரியா
18 ஜூன்
18 இரவு 9.30 ஆஸ்திரேலியா - நெதர்லாந்து
19 ஜூன்
19 அதிகாலை 12.30 ஸ்பெயின் - சிலி
20 ஜூன்
19 அதிகாலை 3.30 கேமரூன் - குரோஷியா
21 ஜூன்
19 இரவு 9.30 கொலம்பியா - ஐவரி கோஸ்ட்
22 ஜூன்
20 அதிகாலை 12.30 உருகுவே - இங்கிலாந்து
23 ஜூன்
20 அதிகாலை 3.30 ஜப்பான் - கிரேக்கம்
24 ஜூன்
20 இரவு 9.30 இத்தாலி - கோஸ்டா ரிகா
25 ஜூன்
21 அதிகாலை 12.30 ஸ்விட்சர்லாந்து - ஃபிரான்ஸ்
26 ஜூன்
21 அதிகாலை 3.30 ஹோண்டுராஸ் - ஈகுவேடார்
27 ஜூன்
21 இரவு 9.30 ஆர்ஜெண்டினா - ஈரான்
28 ஜூன்
22 அதிகாலை 12.30 ஜெர்மனி - கானா
29 ஜூன்
22 அதிகாலை 3.30 நைஜீரியா - போஸ்னியா
30 ஜூன்
22 இரவு 9.30 பெல்ஜியம் - ரஷியா
31 ஜூன்
23 அதிகாலை 12.30 தென் கொரியா - அல்ஜீரியா
32 ஜூன்
23 அதிகாலை 3.30 அமெரிக்கா - போர்ச்சுகல்
33 ஜூன்
23 இரவு 9.30 ஆஸ்திரேலியா - ஸ்பெயின்
34 ஜூன்
23 இரவு 9.30 நெதர்லாந்து - சிலி
35 ஜூன்
24 அதிகாலை 1.30 கேமரூன் - பிரேசில்
36 ஜூன்
24 அதிகாலை 1.30 குரோஷியா - மெக்ஸிகோ
37 ஜூன்
24 இரவு 9.30 இத்தாலி - உருகுவே
38 ஜூன்
24 இரவு 9.30 கோஸ்டா ரிகா - இங்கிலாந்து
39 ஜூன்
25 அதிகாலை 12.30 ஜப்பான் - கொலம்பியா
40 ஜூன்
25 அதிகாலை 1.30 கிரேக்கம் - ஐவரி கோஸ்ட்
41 ஜூன்
25 இரவு 9.30 நைஜீரியா - ஆர்ஜெண்டினா
42 ஜூன்
25 இரவு 9.30 போஸ்னியா - ஈரான்
43 ஜூன்
26 அதிகாலை 12.30 ஹோண்டுராஸ் - ஸ்விட்சர்லாந்து
44 ஜூன்
26 அதிகாலை 1.30 ஈகுவேடார் - ஃபிரான்ஸ்
45 ஜூன்
26 இரவு 9.30 அமெரிக்கா - ஜெர்மனி
46 ஜூன்
26 இரவு 9.30 போர்ச்சுகல் - கானா
47 ஜூன்
27 அதிகாலை 1.30 தென் கொரியா - பெல்ஜியம்
48 ஜூன்
27 அதிகாலை 1.30 அல்ஜீரியா - ரஷியா
0 comments:
Post a Comment