பாகிஸ்தானில் இருந்து
பறந்து
பிரேசிலை அடைந்துள்ள
பந்துகள்
உலக
கோப்பை கால்பந்து
போட்டியில் பயன்படுத்தப்படும் கால்பந்துகள்
அனைத்தும் பாகிஸ்தானின்
சியால்கோட்டில் உள்ள கம்பெனியில் தயாரிக்கப்பட்டு விமானத்தில்
பறந்து பிரேசிலை
அடைந்து இருக்கிறது.
கிரிக்கெட்டுக்கு
புகழ்பெற்ற பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட
பந்துகள் உலக
கோப்பை கால்பந்து
போட்டியில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த உலக கோப்பையில் பயன்படுத்தப்படும் பந்துக்கு பிரசுகா என்ற பெயரை ரசிகர்கள் சூட்டி இருக்கிறார்கள். பிரசுகா என்பது பிரேசில் மக்களின் வாழ்க்கை முறையை சித்தரிப்பதாகும்.
கடந்த
உலக கோப்பை
போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தில் சில குறைபாடுகள்
கூறப்பட்டன. இதனால் இந்த முறை பந்து
தயாரிப்பில் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்தின்
வடிவம் முப்பரிமாண
முறையில் கம்ப்யூட்டர்
மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பந்தின் வடிவம்,
எடை, அழுத்தம்
ஆகியவை மழை
பெய்தால் கூட
மாறாது. பந்தின்
வேகம் விரைவாக
இருக்கும். பந்து எப்படி அடித்து திரும்பினாலும்
துல்லியமாக இருக்கும். இந்த பந்தை வடிவமைக்க
2½ ஆண்டுகள் வரை பிடித்து இருக்கிறது. பல
வண்ணங்களில் மிளிரும் 69 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட
இந்த பந்தின்
எடை 437 கிராமாகும்.
பந்தின் தரத்தை
10 நாடுகளை சேர்ந்த 300 வீரர்களிடம் விளையாட கொடுத்து
சோதித்து பார்த்து
இறுதி செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment