முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற  வன்முறைகள் தொடர்பில்
பூரண விசாரணை நடத்த வேண்டும்

                                - மனித உரிமை கண்காணிப்பகம்


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக பூரண விசாரணைகளை நடத்த வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கடுமையான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மோதல் சம்பவங்களில் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளது. முழு அளவில் விசாரணை நடாத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுபல சேனா போன்ற கடும்போக்குடைய தேசியவாத இயக்கங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன் நின்றுவிடாது, நாட்டின் சகல சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன சமூகங்களினதும் பங்களிப்புடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முனைப்புக்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இந்த அரசாங்கம் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top