முஸ்லிம்
சமுதாயத்துக்கு முன் இருக்கும் முக்கியமான கேள்வி?
-
தாஹா முஸம்மில்
இந்த நாட்டில் கடந்த
இரண்டு வருடங்களுக்கும்
மேலாக தொடரும்
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மற்றுமொரு கருப்பு
ஜூலை போன்ற
நிலைக்கு நாட்டை
இட்டுச் செல்லுமோ
என்ற அச்சத்தை
தோற்றுவித்துள்ளது.
அளுத்கமை,
தர்கா டவுன்,
பேருவளை, வெளிபென்ன
வன்முறையினால் பல உயிர்கள் பலியாக்கப்பட்டன, பலர் காயமடைந்து இன்னும் சிகிச்சைப்
பெற்று வருகின்றனர்,
பல கோடி
ரூபா சொத்துக்களும்
நாசமாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக
அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாத் ஆகியோர் அரசையே
விமர்சிக்கும் அளவுக்கு சென்றனர்.
அமைச்சு
பதவிகளை வகிப்பதால்
மட்டும் சமூகத்துக்காக
எதையும் பெரிதாக
சாதித்துவிட முடியாது என்பதை நேற்றைய அமைச்சரவையில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் வாக்குவாதம் ஹக்கீம், ரிஷாத்
ஆகியோருக்கு உணர்த்தி இருக்கும். வன்முறையில் ஈடுபட்டோருக்கு
எதிராக நடவடிக்கை
எடுக்க விரும்பாது,
அரச மேல்
மட்டமே இனவாத
மனப்பான்மையுடன் செயற்பட்டிருப்பது எமது எதிர்கால இருப்பை
கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த
சம்பவத்துக்கு எதிராக எமது உணர்வுகளை வெளிப்படுத்து
முகமாக மேற்கொள்ளப்பட்ட
கடையடைப்பு, வன்முறையற்ற ஆர்ப்பாட்டம் போன்ற சாத்வீக
நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. எமது தமிழ் மற்றும்
நல்லுள்ளம் கொண்ட சிங்கள சகோதரர்களின் கண்டனங்களும்
உரத்து கேட்டன
என்பது பாராட்டுக்குரியது.
ஆயினும்,
எமது ஆர்ப்பாட்டங்களும்
ஹர்த்தாலும் வெற்றியடைந்தன, பாதிக்கப்பட்ட
மக்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்தோம் என்று
திருப்த்தியடைந்து இருக்கப் போகின்றோமா
அல்லது இதுபோன்ற
சம்பவங்கள் இனியும் நடக்காது இருப்பதற்கான வழி
வகைகளைக் காணப்
போகின்றோமா என்பது எம் முன் இருக்கும்
முக்கியமான கேள்வியாகும்.
0 comments:
Post a Comment