உலக மக்களின் புகைப்படங்களை ரகசியமாக சேகரிக்கிறது அமெரிக்கா: 

நியூயார்க் டைம்ஸ் தகவல்

அமெரிக்க   உளவுத்துறையால்,   உலகம்   முழுவதும்                 இலட்சக் கணக்கானோரின் முகத்தோற்ற படங்கள் நாள்தோறும் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பான என்.எஸ்..யின் முன்னாள் உளவாளி ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி, அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், "என்.எஸ்.ஏ”. அமைப்பு, முன்பு தனது உளவு வேலைகளுக்காக செல்போன் வாயிலாக அனுப்பப்படும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள், பிறரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களின் முகத்தோற்றம், கைரேகை பதிவுகள் உள்ளிட்டவைகளை சேகரித்து வருகிறது.கடந்த 4 ஆண்டுகளாக புதிய தொழில்நுட்பத்தின் மூலம், மின்னஞ்சல், செல்போன் மூலம் அனுப்பப்படும் செய்திகள், சமூக வலை தளங்கள், வீடியோ கான்பரன்சிங் ஆகியவற்றில் இருந்து முகத்தோற்ற படங்களை சேகரித்து வருகிறது.இந்த புதிய முறை மூலம், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பிற நாடுகளின் உளவாளிகளை அடையாளம் காண முடியும் என அமெரிக்க கருதுகிறது. இதுவரை எவ்வளவு பேரின் முகத்தோற்ற படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும், அதில் எவ்வளவு பேர் அமெரிக்கர்கள் என்றும் தெரியவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்.எஸ்.. செய்தித் தொடர்பாளர் வாணி எம் வின்ஸ் தெரிவிக்கையில், "ஒட்டுநர் உரிமம் கோரும் விண்ணப்பம், பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்களில் உள்ள புகைப்படங்களை சேகரிக்க என்.எஸ்..வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை' எனத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் புகைப்படங்கள், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படங்களை என்.எஸ்.. சேகரிக்கிறதா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top