நைஜிரியாவில் கால்பந்து மைதானத்தில்
குண்டுவெடித்ததில் 40 பேர் பலி
- பொலிஸார் தெரிவிப்பு
வடகிழக்கு
நைஜிரியாவில் கால்பந்து மைதானத்தில் குண்டு வெடித்ததில்
40 பேர் பலியாகினர்
என்று பொலிஸார்ர்
தெரிவித்துள்ளனர்.
அடாமாவா
மாநிலத்தின் முபி நகரில் கால்பந்து மைதானத்தில்
வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில்
40 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நகரில்
ஏற்கனவே போகா
ஹாரம் தீவிரவாதிகள்
தாக்குதல் நடத்தினர்.
நைஜிரியா நாட்டில்
உள்ள போகோஹாராம்
என்ற தீவிரவாத
அமைப்பு தனிநாடு
கேட்டு பல
ஆண்டுகளாக போராடி
வருகிறது. இந்நிலையில்
நைஜீரிய பள்ளியில்
படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி
அந்த நாட்டையே
நடுநடுங்க செய்தது.
கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜிரிய அரசு
உலக நாடுகளின்
உதவியோடு தீவிர
முயற்சி செய்து
வருகிறது.
இந்த
நிலையில் கால்பாந்து
மைதானத்தில் நேற்று மாலை வெடிகுண்டு வெடித்தது.
இதில் பலர்
காயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று
பொலிஸ் மற்றும்
மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடாமாவா மாநிலம்
போகா ஹாரம்
தீவிரவாதிகளால் கடும் பாதிப்புள்ளாகியுள்ளது.
0 comments:
Post a Comment