ஜனாதிபதியைச் சந்தித்து என்ன பயன்?
ஹஸன் அலி எம்.பி விரக்தி நிலையில்
. –ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
முஸ்லிம்கள்
இன்று எதிர்நோக்கியுள்ள
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்
வகையில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்க்ஷவைச்
சந்தித்துப் பேசுவதால் என்ன பயன் கிடைக்கப்
போகிறது? என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் செயலாளர்
நாயகமும் நாடாளுமன்ற
உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன் அலி
கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர்
ரிஷாத் பதியுதீன்
தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஜனாதிபதியைச் சந்தித்து பேசியமை தொடர்பில் ஹஸன்
அலியிடம் கேள்வி
எழுப்பி ஏன்
உங்கள் கட்சியை
ஜனாதிபதி இதுவரை
சந்திக்கவில்லை என்று கேட்ட போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிமகளின்
நிலைமைகள் தொடர்பில்
நாமும் ஜனாதிபதியைச்
சந்திக்க முடியும்.
ஆனால் அவரைச்
சந்தித்தும் என்னதான் நடக்கப் போகிறது? இப்போது
இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து விடயங்களின்
பின்னணியிலும் பேரினவாத மஞ்சள் காவிகளும் உள்ளனர்.
இதனை அண்மையில்
அறிந்து கொள்ளக்
கூடியதாகவிருந்தது.
அரசாங்கம்
நினைத்தால் இந்தப் பிரச்சினைகளை ஓர் இரவுக்குள்
தீரத்து விட
முடியும். ஆனால்
எதுவும் நடந்தபாடில்லையே
என்று ஹஸன்
அலி மேலும்
தெரிவித்தார்
0 comments:
Post a Comment