ஜெனிவாக் கூட்டத்தில் மீண்டும் இலங்கை விவகாரம்?



ஜெனிவாவில் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 26ஆவது கூட்டத்தொடரில்,   இலங்கை நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 இந்தக் கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த் தும் .நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது பணியகத்தின் செயற்பாடுகளின் நிலை குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் .நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நவநீதம்பிள்ளை, சமர்ப்பிக்கும் கடைசி அறிக்கையாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான .நா. குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அறிவிப்பை அடுத்து, இலங்கை நிலை குறித்து பேரவையில் விவாதங்கள் எழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 எதிர்வரும் 11ஆம் திகதி காலை தொடக்கம் மதியம் வரை நடைபெறவுள்ள, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குழு விவாதத்திலும் நவநீதம்பிள்ளை ஆரம்பித்து வைப்பாளராகப் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top