இது சம்மாந்துறை முஸ்லிம் ஊரெனக்
கூற வெட்கப்பட வேண்டிய தருணம்...!!
ஆதங்கப்படுகின்றார்
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
இது
சம்மாந்துறை முஸ்லிம் ஊரெனக் கூற வெட்கப்பட
வேண்டிய தருணம்...!!
அளுத்கம
சம்பவம் இரத்தக்
கறை படிந்த
ஓர் வரலாறு
பேசும் சம்பவம்
என்பதை இலங்கையில்
பிறந்த எம்
மகனும் ஏற்றுக்
கொள்வான்.
எம்
முஸ்லிம் சகோதரர்கள்
உயிர்கள் அநிநியாயமான
முறையில் பறிக்கப்பட்டன.உடமைகள் சேதமாக்கப்பட்டன,சூரையாக்கப்பட்டன.சிறு குழந்தை,பெண்கள் என்று
கூட பார்க்காமல்
தாக்கப்பட்டனர்.
இதெல்லாம்
எதற்காக.. ?
இஸ்லாம்
என்ற மார்க்கத்தை
தங்கள் மார்க்கமாக
ஏற்ற ஒரே
ஒரு காரணத்தால்
தான்.இதனை
நாம் கண்டிக்க
வேண்டுமல்லவா..?
நேற்று
ஹர்த்தால் சம்மாந்துறையில்
அனைவரினதும் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது
உண்மைதான்.
ஆனால்,இன்று வியாழக்
கிழமை நாடு
தழுவிய ரீதியில்
அரசியல் வாதிகள்,புத்திஜீவிகள், பல
இயக்கங்களின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படும்
ஹர்த்தாலிற்கு ஏன் சம்மாந்துறை மண் உடன்
படவில்லை..?
ஹர்த்தால்
என்றால் முதலில்
மூடப்படும் வங்கிகள் கூட சம்மாந்துறையில் ஏன்
மூடப்படவில்லை..?
பாடசாலைகள்
கூட நடாத்துவதா..?
மூடுவதா..?என
அறியாமல் இருப்பது
ஏன்..?
சம்மாந்துறை
ஹிஜ்றா சந்தியைச்
சூழ ஹர்த்தால்
அனுஸ்டிப்பின் எவ் வித சாடைகளையும் காட்டாது
விரல் விட்டு
எண்ணக்கூடிய கடைகளைத் தவிர ஏனைய கடைகள்
திறப்பட்டிருப்பதேன்..?
ஒரு
நாள் மூடினால்
நாம் என்ன
குறைந்துவிடுவோமா..?
எமது
பக்கத்து ஊர்களான
கல்முனை,சாய்ந்தமருது,அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று,பொத்துவில்,காத்தான்குடி
இவ் இடங்களிலெல்லாம்
ஹர்த்தால் அனுஸ்டிப்பு
நிகழும் போது
ஏன் நாம்
செய்ய முடியாது.
அதிலும்,அட்டாளைச்சேனையில் தொடர்ந்து 3 நாட்களாகர நடைபெறுகிறதே அதைக்
கண்டாவது எமக்கு
ரோசம் வரவில்லையா..?
இது
சம்மாந்துறை முஸ்லிம் ஊர் என கூற வெட்கிக்கும் தருணம்
இது.
- - துறையூர்
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
.
Mansu valikkiratu.
ReplyDelete