ஜனாஸா வாகனம் மீதும்
தாக்குதல் நடத்திய சிங்களப் பெண்கள்!!!!
-----எம்.ஐ.முபாறக்------
பொதுபலசேனா
முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை சதித்திட்டங்களை எப்போது
முன்னெடுக்கத் தொடங்கியதோ அப்போதே இந்நாட்டு முஸ்லிம்கள்
உணர்ந்துவிட்டார்கள் சிங்கள முஸ்லிம்
இனக்கலவரம் ஒன்றை நிச்சயம் இந்தப் பேரினவாத
அமைப்பு ஏற்படுத்துமென்று.
முஸ்லிம்களாகவே
வன்முயில் இறங்கவேண்டும்,
அந்த வன்முயைக்
காரணங்காட்டி பழியை முஸ்லிம்கள் மீது சுமத்திவிட்டு
முஸ்லிம்களைக் கொன்றழிக்க வேண்டும், வர்த்தக நிலையங்களைத்
தீக்கிரையாக்கவேண்டும் என்பதே பொதுபலசேனாவின்
திட்டம். இந்தத்
திட்டத்தை நன்கு
உணர்ந்த முஸ்லிம்கள்
இரண்டு வருடங்களாக
மிகவும் பொறுமையாகவே
இருந்தனர். அந்தப் பொறுமையின் தன்மையை அவதானித்த
பொதுபலசேனா, முஸ்லிம்கள் என்றுமே வன்முறைக்கு வரமாட்டார்கள்
என்ற உண்மையை
உணர்ந்தனர். இதனால், அவர்களாகவே வன்முயைத் தூண்டினர்.
இதற்கான ஆதாரங்கள்
பலமாக உள்ளன.
வன்முறை
இடம்பெற்ற தினமான
15ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை அளுத்கமவில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் கூட்டத்தில்
உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார
தேரரின் வார்த்தைகள்
இந்தக் கலவரம்
நன்கு திட்டமிடப்பட்ட
ஒன்று என்பதற்கு
நல்ல ஆதாரம்.
~~பொலிஸார்
எங்கள் இனத்தைச்
சேர்ந்தவர்கள் விசேட அதிரடிப்படையினர் எங்கள் இனத்தைச்
சேர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் (பௌத்த
இளைஞர்கள்) ஏன் பயப்பட வேண்டும்?|| என்று
ஞானசார அந்த
உரையில் கூறுகிறார்.
இதன்மூலம் அவர்
மறைமுகமாக சிங்கள
இளைஞர்களை வன்முறைக்குத்
தூண்டினார் என்பது தெளிவாகிறது.
இதை
விடவும் உறுதியான
ஆதாரம் ஒன்று
அவரது பேச்சில்
உண்டு. ~~இன்று அளுத்கமவில்
உள்ள முஸ்லிம் கடைகளுக்கு புதுசரணாய்|| என்று ஞானசார
அவரது உரையில்
மேலும் கூறினார்.
அதாவது, இன்று
அளுத்கமவில் உள்ள முஸ்லிம் கடைகளின் கதை
முடிகிறது என்பதே
அதன் அர்த்தம்.
ஆகவே, இத்தாக்குதல்
நன்கு திட்டமிடப்பட்டதுதான்
என்பதற்கு ஞானசாரவின்
உரை ஆதாரம்.
அதுமாத்திரமின்றி,
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் அனைவரும்
ஒரேமாதிரியான கத்திகளை வைத்திருந்தனர் என்றும் அவர்கள்
பஸ்களில் ஏற்றிவரப்பட்டு
முஸ்லிம் பகுதிகளில்
இறக்கிவிடப்பட்டனர் என்றும் பாதிக்கப்பட்ட
மக்கள் எம்மிடம்
தெரிவித்தனர்.
ஆகவே,
இதுபோல் பல
ஆதாரங்கள் உள்ளன.
அத்தகைய ஆதாரங்கள்
இத்தாக்குதல்கள் பொதுபலசேனாவால் நன்கு திட்டமிடப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இத்தாக்குதலுடன் ஒட்டிய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அச்சம்பவங்களுள் ஒன்த்தான் இந்த ஆக்கத்தில் விவரிக்கின்ற.
முஸ்லிம்கள் மீது சிங்களப் பெண்கள் நடத்திய
தாக்குதல்பற்றியதுதான் அது.
பேரினவாதிகளால்
கொல்லப்பட்ட தர்ஹா நகரைச் சேர்ந்த எமது
இரண்டு சகோதரர்களின்
ஜனாஸாக்கள் திங்கள்கிழமை 16ஆம் திகதி பிற்பகல்
2.30 மணிக்கு களுத்துறை பெரிய பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்பட்டு குளிப்பாட்டி
கபனிடப்பட்டு தொழுகை நடத்தப்பட்ட பின்னர் நல்லடக்கத்துக்காக
தர்ஹா நகருக்கு
கொண்டு செல்லப்பட்டன.
அந்த
இரண்டு ஜனாஸாக்களுடன்
20 பொலிஸாரும் பத்து முஸ்லிம் சகோதரர்களும் இரண்டு
வாகனங்களில் தர்ஹா நகருக்குச் சென்றனர். இரண்டு
பொலிஸ் வாகனங்கள்
முன்னுக்கும் பின்னுக்கும் பாதுகாப்பை வழங்கிக்கொண்டு சென்றன.
போகும்
வழியில் கந்தவிகார
வீதியில் வைத்து
பேரினவாதிகள் வாகனங்களை இடைமறித்தனர். வாகனத்திலிருந்த ஜனாஸாக்களை
எட்டிப் பார்த்து,
~~சாமான் போகுதுபோல, திரும்பி இதாலதானே வருவீங்க, வாங்க|| என்று கூறினர்.
திரும்பி
வரும்போது எம்மீது
தாக்குதல் நடத்த
அவர்கள் தயாராக
இருக்கின்றார்கள் என்பதை அறிந்த எமது சகோதரர்கள்
பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க வேறு பாதையைப் பயன்படுத்தி
பேருவளைக்கு வந்தனர்.
அவ்வாறு
வரும்போது ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பேரினவாதிகள்
இரண்டு வாகனங்களையும்
மறித்து கடுமையாகத்
தாக்கத் தொடங்கினர்.
நாம் கொல்லப்பட்டுவிடுவோம்
என்று நினைத்துக்கொண்டு
காடையர்களிடம் இருந்து தப்புவதற்காக முடியுமானவரை போராடினர்.
வானும், லொறியும்
வளைத்து வளைத்துத்
தாக்குதல் தொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது
வாகனங்களை நிறுத்தாமல்
ஓட்டிக்கொண்டே வந்தனர்.
வாகனங்களின்
கண்ணாடிகள் அனைத்தும் முற்றாக நொறுக்கப்பட்டதால் அதன் வழியாகக் கத்திகளை உள்ளே
நுழைத்து எமது
சகோதரர்களை வெட்டத் தொடங்கினர். வாகனங்கள் ஓடிக்கொண்டே
இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்களால் முஸ்லிம்களை சரியாகக்
குறிவைத்து வெட்ட முடியவில்லை. ஆனால், வாகனங்களின்
யன்னல் ஓரத்தில்
இருந்த சகோதரர்கள்
இந்த வாள்வெட்டுகளால்
காயமடைந்தனர்.கைகளிலும், தலைகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
இவ்வாறு
கடும் போராட்டத்தின்
மத்தியில் அவர்கள்
உறுதியாக நின்று
போராடி கயவர்களிடமிருந்து
தப்பித்து வந்தனர்.இதுகுறித்து பேருவளை
பொலிஸில் முப்பாடும்
செய்தனர்.
இதில்
ஆச்சரியமிக்க விடயம் என்னவென்றால், இந்த சகோதரர்கள்
மீது தாக்குதல்
நடத்தியவர்களுள் அதிகமானவர்கள் பெண்கள் என்பதுதான். தாக்கப்பட்ட
இந்த சகோதரர்களால்
அவர்களின் கண்களையே
நம்பமுடியவில்லை.
~~சிங்களப் பெண்கள் இப்படிக் கத்திகளையும்
வாள்களையும் ஏந்திக்கொண்டு எம்மை வெறித்தனமாகத் தாக்குவதற்கு எம்மைக் கொன்று குவிக்கத் துடிப்பதற்குக் காரணம் என்ன? நாம் அவர்களுக்கு என்ன குற்றம் செய்தோம்? அவர்களுடன் சகோதரர்களாகத்தானே பழகினோம்|| என்று மிகவும்
கவலையுடன் பாதிக்கப்பட்டவர்கள்
எம்மிடம் கூறினர்.
அத்தோடு,
பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் பார்த்துக்கொண்டு
நிற்கும்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள்
காடையர்களைக் கட்டுப்படுத்த எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காது காடையர்களுக்குப்
பாதுகாப்பு வழங்கிக்கொண்டு அனைத்தையும்
பார்த்துக்கொண்டு நின்றனர் என்று பாதிக்கப்பட்ட சகோதரர்கள்
மேலும் தெரிவித்தனர்.
அதுவும் ஊரடங்குச்
சட்டம் நடைமுயில்
இருக்கும்போதுதான் இது இடம்பெற்றது.
இவ்வாறு
எத்தனையோ சோகச்
சம்பவங்கள் இந்தப் பேரினவாதத் தாக்குதலின் பின்னணியில்
உள்ளன. அவற்றை
நாம்
ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் கொண்டுவருவோம்.
~~இவ்வளவு காலமும் சகோதரர்களாகப் பழகிய சிங்களவர்கள் எம்மீது வெறிகொண்டு எம்மை விரட்டி விரட்டித் தாக்கியதை எண்ணிப் பார்க்கும்போது நாம் மிகவும் கவலையடைகிறோம். அதிலும் சிங்களப் பெண்கள் கத்திகளையும், வாள்களையும் ஏந்திக்கொண்டு எம்மைக் கொல்வதற்காக விரட்டிய அந்தக் காட்சியை எம்மால் உயிருள்ளவரை மறக்கவே முடியாது. பெண்களே இன வெறியர்களாக மாறும் அளவுக்கு நாம் அவர்களுக்கு என்ன கொடுமை செய்தோம்?||
- அப்துல்
சகூர் முஹம்மத் இப்ராஹீம் (தாக்கப்பட்டவர்களுள் ஒருவர்)
நன்றி: சுடர் ஒளி ([ THE ARTICLE PUBLISHED IN SUDAR OLI
ON 19-06-2014 ])
0 comments:
Post a Comment