சுனாமியில் சிக்கிய ஜப்பான் புகுஷிமா அணு உலைக்கு

அடியில் பனிச்சுவர்

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு உலை சுனாமி பேரழிவில் சிக்கியபோது வெடித்துச் சிதறியது. அப்போது அணு உலையில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தற்போது அந்த அணு உலை முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முடங்கியுள்ள அந்த அணு உலைக்கு கீழே உள்ள நிலத்தடி நீர் அதிகமான கதிர்வீச்சு பாய்ந்து நச்சுத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. அது அருகிலுள்ள மலை பகுதிகளின் கீழ் காணப்படும் நிலத்தடி நீரோடு கலந்து விடாமல் தடுப்பதற்காக பனிச்சுவரை எழுப்பும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் இந்த பனிச்சுவரை எழுப்ப அனுமதி அளித்தது. அரசின் நிதியுதவியுடன் எழுப்பப்படும் இந்த பனிச்சுவரில் மண் நிரப்பப்பட்ட  பைப்புகளை உட்செலுத்தி 1.5 கிலோ மீட்டர் ஆழத்தில் பிரத்யேக இயந்திரம் மூலம் அங்குள்ள நச்சுத்தன்மை வாய்ந்த நிலத்தடி நீர் பனிக்கட்டிகளாக குளிர்விக்கப்படுகிறது.
புகுஷிமா அணு உலை பேரழிவால் ஏற்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த மண் மற்றும் நீரை முழுமையாக அகற்ற இன்னும் பல ஆண்டுகளாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக வீரியம் கொண்ட கதிர்வீச்சு அபாயம் இருப்பதால் அந்த பணியை தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிடவேண்டிய சூழ்நிலையே எற்படும் என்று ஜப்பான்  வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top