பொது பல சேனாவின்
குற்றம்: எங்களுடைய அவமானம்!
– ஒரு பெண் பத்திரிகையாளரின் பார்வையில் “அளுத்கம “.
( கட்டுரை – திஸராணி குணசேகர
)
நாட்டில்
நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது, இன்று
ஒரு மரக்கலயா
(marakkalaya) அல்லதுபறையா (paraya) ஒரு சிங்களவனை தொட்டாலும்
……… அதுவே அவர்களுடைய
முடிவாகும் ————- -கலகொட ஞானதாஸ
தேரர் (15-6-2014) அளுத்கமவில்.
தன்னுடைய கைகளையும் கால்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனை, சுய கட்டுப்பாடுள்ளவனை, பிக்கு என கூறுங்கள் -புத்தர்.
மேடையில்
கலகொட ஞானதாஸ
தேரர் உரையாற்றிக்
கொண்டிருக்கிறார், வாயிலிருந்து நெருப்பும்
நஞ்சும் கொட்டுகிறது.
கீழே பெருமளவு
மக்கள் மிகுந்த
ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிக்கிறார்கள்.
அவர்களில்
பொதுமக்களும் பௌத்த துறவிகளும் உள்ளனர். இன்னும்
சில மணிநேரத்தில்
அவர்கள் வெறியாட்டம்
ஆடப்போகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை,
அவர்கள் வணங்கும்
பாணியில் கைகளை
வைத்திருக்கின்றனர். அவர்களுடைய முகங்களை
பார்க்கும் போது அவர்கள் அரசியல் உரையொன்றை
கேட்கவில்லை மத உரையொன்றை அவதானிப்பது போல
உள்ளது.
அங்கு
ஜிஹாத் போராளிகளும்,
புனித போராளிகளும்
அமர்ந்திருக்கின்றனர், ஆனால் அவர்கள்
இங்கு மஞ்சள்
ஆடையணிந்துள்ளனர். தங்களை பௌத்த
துறவிகள் என
அழைக்கின்றனர்.
முழுமையாக
ஆயுதம் ஏந்திய
பொலிஸாரும் இராணுத்தினரும் உரையை கேட்டபடி கண்காணித்தபடி
உள்ளனர், தேரர்
மெல்ல மெல்ல
பொதுமக்களை உணர்வூட்டுகின்றார், சட்டத்தை
மீறுமாறு மக்களை
கேட்கிறார், அவர் மிரட்டுகிறார் எச்சரிக்கிறார், அவரது
வார்த்தைகள் கூர்மையான ஆயுதங்களை போல வந்து
விழுகின்றன.
ஆனால்
சட்டத்தின் பாதுகாவலர்கள் இன்னமும் அதை கேட்டபடியுள்ளனர்.
அவரை கைது
செய்து சட்டத்தின்முன்
நிறத்தவில்லை.அவரை எங்கு வைக்க வேண்டுமோ-
சிறையில் வைக்கவில்லை
பொலிஸார் செயற்படவில்லை,
சட்டம் மரணித்து
விட்டது போல
தோன்றுகிறது. வன்முறையையும் கசப்புணர்வையும்
விதைப்பவர்கள் கையில் மேடையுள்ளது.
புனிதப்
போர்களில் ஈடுபடுபவர்கள்
யாராக, யாருக்கெதிராகயிருந்தாலும்
அது நரகமே,
பௌத்தத்தின் உண்மையான இயல்பு காரணமாக நாடு
அதை மாத்திரம்
அனுபவிக்காமல் இருந்தது. ஆனால் இனிமேலும் அப்படியில்லை,
அது தீமைகள்
நிறைந்த ராஜபக்ஸ
பௌத்தமாக முழுமையாக
உருமாறியுள்ளது.
கலகொட
ஞானதாஸ தேரர்
அதன் இறைதூதர்,
தலைமை மதகுரு.
அது சந்தேகம்
மற்றும் வெறுப்புணர்வின்
மதம், வன்முறையை
நம்பிக்கையாக கொண்டது நச்சுத்தன்மை வாய்ந்தது. படுகொலைகள்
பாரிய வன்முறைகள்
மீது நம்பிக்கை
கொண்டது.
பேரணிக்கு
யார் அனுமதி
வழங்கியது?..
முதலில்
நடந்த சம்பவம்
தற்செயலானவொன்று, பௌத்த மதகுரு மற்றும் அவரது
வாகன சாரதி
மீது மேற்கொள்ளப்பட்டதாக
குற்றம்சுமத்தப்படும் தாக்குதல் தற்செயலாக
இடம்பெற்றவொன்று, தற்போதைய இரத்த வெறியாட்டத்தில் இது
மாத்திரமே தற்செயலான
செயல், மற்றவை
எல்லாம் நன்கு
திட்டமிடப்பட்டவைகள். பொது பல
சேனா வன்முறையை
தூண்டியது, அதிகாரிகள் அதனை தடுக்காமல் வேடிக்கை
பார்த்தனர் அனுசரனை வழங்கினர்.
ஆரம்ப
கட்ட வன்முறைகளுக்கு
பின்னர் சற்று
அமைதி நிலவியது.
பின்னர் தீடிரென
யாரோ இன்னமும்
பதட்டம் குறையாமலிருந்த
அளுத்கமவில் பொதுபல சேனா பேரணியை நடத்த
அனுமதித்தனர், அந்த முடிவை யாரோ மனநிலை
பாதிக்கப்பட்டவர், சட்டம். மனிதாபிமானம்
இவையெல்லாம் தெரியாதவர் எடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறான
முக்கியமான முடிவை சாதாரண பொலிஸ் அதிகாரியோ
அல்லது பொலிஸ்-மா அதிபரோ
எடுத்திருக்க முடியாது. மிக உயர் பதவியிலிருப்பவரே
இதற்கு அனுமதி
வழங்கியிருக்க வேண்டும்.
மிக
உயர்பதவியில் ஜனாதிபதி மகிந்த இருக்கிறார், பொலிவியாவிலிருந்து
முழுமை பெறாத
டுவிட்களை செய்கிறார்,
வன்முறையையும் வன்முறையை பயன்படுத்துபவர்களையும்
கண்டிப்பதற்கு பதில் – அவரது சகோதரர்கள் பொதுபல
சேனா சட்டவிரோத
பேரணியை நடத்தவில்லை,
அவர்கள் சட்டவிரோத
ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை, அவர்கள் பேரணியையும் ஆhப்பாட்டத்தையும் நடத்தவதற்கு
அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதற்கு அனுமதித்திருக்காவிட்டால் அளுத்கம வழமைக்கு
திரும்பியிருக்கும். அப்பாவி உயிர்களை
காப்பாற்றி இருக்கலாம்.
அதிகாரத்தில்
இருப்பவர்களின் நோக்கம் என்ன? சிறிய கலவரம்?
கட்டுப்படுத் தப்பட்ட கலவரம்? சிறிய அளவிலான
கறுப்பு யூலை?
அரசால் வழிநடத்தப்படும்
கலவரம்? தங்கள்
சொற்களையும் செயல்களையம் கட்டுப்படுத்துமாறு
சிறுபான்மையினருக்கு எச்சரிக்கை? முஸ்லீம்
தமிழர் கிறிஸ்தவர்களுக்கு
நீங்கள் எதனையும்
எதிர்க்க முடியாது
என்ற எச்சரிக்கை?
சிங்கள பௌத்தாகளின
கவனத்தை திசைதிருப்ப
புதிய எதிரியை
உருவாக்குதல்? நாங்களும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என
மோடிக்கும் மேற்குலகிற்கும் காண்பித்தல்?
இவை எல்லாமா?
அல்லது ஒன்றிரண்டா?
இல்லாவிட்டால்
சிறு நெருப்பை
ஊதி பற்றவைக்க
பொதுபலசேனாவிற்கு அனுமதியளித்தது யார்? ஏன் பொலிஸாரும்
இராணுவத்தினரும் இதனை தடுக்கவில்லை. நான் கறுப்பு
யூலை முழுவதும்
பார்த்திருக்கிறேன். சிங்கள இனத்தை
சேர்ந்தவர் என்ற வகையில் மீணடும் அந்த
கொடுமை நிகழ்வதை
பார்க்க விரும்பவில்லை.
ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட
கலவரங்களை இந்த
ஆட்சியின் கீழ்
காணமுடிகின்றது. இவ்வாறான சிறிய கலவரங்கள் ஒரு
நாள் கட்டுக்கடங்காதவையாக
மாறலாம்.
இது
சிறுபான்மையினருக்கான நாடல்ல, ஒழுக்கம்மிக்க
சிங்கள பௌத்தர்களுக்கான
நாடுமல்ல, இது
சட்ட ஒழுங்கின்மையின்மையின்
சொர்க்கம்.
இன்னும்
இடம் பெறப்போகின்ற,
இடம்பெற்ற வன்முறைகளுக்கும்
மரணங்களுக்கும், பொது பல சேனாவும் ராஜபக்ஸாக்களும்
பொறுப்பேற்க வேண்டும். இது அவர்களுடைய செயல்,
இது அவர்களுடைய
மன்னிக்க முடியாத
குற்றம்.
நாங்கள்
அவர்களை தேர்ந்தெடுத்தோம்.
நாங்கள் அவர்களை
சகித்துக் கொண்டோம்,
அது என்றென்றும்
நாங்கள் வெட்கப்படவேண்டிய
விடயம்.
0 comments:
Post a Comment