சிங்கப்பூர்
ஆஸ்பத்திரியில் டைரக்டர் ராம நாராயணன் மரணம்;
விமானம் மூலம்
உடல் சென்னை கொண்டு செல்லப்படுகின்றது
சினிமா
டைரக்டர் ராம
நாராயணன் சிங்கப்பூர்
ஆஸ்பத்திரியில் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய
உடல் விமானம்
மூலம் சென்னை
கொண்டுசெல்லப்படுகிறது.
சுமை,
ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிங்கக்குட்டி, வேங்கையின்
மைந்தன், சிவந்த
கண்கள், சூரக்கோட்டை
சிங்கக்குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி
ஏழுமலை வெங்கடேசா
உள்பட தமிழ்,
தெலுங்கு, கன்னடம்,
இந்தி, மராட்டி,
குஜராத்தி, போஜ்புரி, மலாய் ஆகிய மொழிகளில்
128 படங்கள் டைரக்டு செய்து சாதனை புரிந்தவர்
ராம நாராயணன்
இவருக்கு
வயது 66.
கரகாட்டக்காரன்
உட்பட ஏராளமான
படங்களை தயாரித்து
விநியோகமும் செய்திருக்கிறார். ராம நாராயணனுக்கு கடந்த
சில ஆண்டுகளாக
சிறுநீரக கோளாறு
இருந்துவந்தது. இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஒரு
ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு
9 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில்
அவர் மரணமடைந்தார்.
விமானம் மூலம்...ராம நாராயணன்
உடல் விமானம்
மூலம் நாளை
(செவ்வாய்க்கிழமை) காலை சென்னை
கொண்டுசெல்லப்படுகிறது. அவருடைய இறுதிச்சடங்கு
நாளை மாலை
நடக்கிறது.
ராம
நாராயணன் மரணமடைந்த
தகவல் தமிழ்
திரையுலகில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.‘அவருடைய மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
சங்கம் இரங்கல்
தெரிவித்து இருக்கிறது.
0 comments:
Post a Comment