மோடியின் தாயாருக்கு நவாஸ் ஷெரீப் அழகிய புடவை
பரிசு
நெகிழ்ச்சியுடன் நன்றி
தெரிவித்துள்ளார் இந்தியப்பிரதமர்
இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடி பதவி
ஏற்பு விழாவில்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து
கொண்டார். மறுநாள்
மோடியை நவாஸ்
ஷெரீப் சந்தித்து
பேசினார். அப்போது
இருவரும் தங்கள்
தாயாரின் நலம்
குறித்து விசாரித்துக்கொண்டனர்
அல்லவா?
இந்த
சந்திப்பின்போது, நவாஸ் ஷெரீப்பின் தாயாருக்கு மோடி
ஒரு அழகிய
சால்வையை அன்பு
பரிசாக தந்து
அனுப்பினார். இதை நவாஸ் ஷெரீப், தனது
தாயாரை நேரில்
சந்தித்து வழங்கினார்.
இதற்காக
பிரதமர் மோடிக்கு
நவாஸ் ஷெரீப்பின்
மகள் மரியம்
ஷெரீப், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில்
நன்றி தெரிவித்திருந்தார்.
தற்போது,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா
பென்னுக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
வெள்ளை நிறத்தில்
ஒரு அழகிய
புடவையை அன்புப்
பரிசாக அனுப்பி
உள்ளார். இதற்காக
அவருக்கு பிரதமர்
மோடி நன்றி
தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக
அவர் ‘டுவிட்டர்’
சமூக வலைத்தளத்தில்,
‘‘எனது தாயாருக்காக ஒரு அழகிய வெள்ளை நிறப்புடவையை
நவாஸ் ஷெரீப்ஜி அனுப்பி உள்ளார். உண்மையிலேயே அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த புடவையை வெகுவிரைவில் என் தாயாருக்கு அனுப்பி வைப்பேன்’’
என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment