நாடாளுமன்ற உறுப்பினர்
சுரேஸ் பிரேமச்சந்திரனைத்
தாக்குவதற்கு முயற்சி!
முல்லைத்தீவில்
காணாமல் போனவர்களின்
உறவினர்கள் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக
படையினரின் ஒழுங்கமைப்பில் மாற்றுப் போராட்டம் ஒன்றினை
நடத்துவதற்கு முயன்ற சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்
சுரேஷ் பிரேமச்சந்திரனை
தாக்க முற்பட்டதுடன்,
அங்கே பாதுகாப்பு
கடமையிலிருந்து பொலிஸார் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினரை
தாக்க முற்பட்டுள்ளார்.
இன்றைய
தினம் காலை
9 மணிக்கு குறித்த
கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு
தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம் பகுதிகளிலிருந்து பெருமளவு மக்கள் படையினரால் பேருந்துகளில்
ஒழுங்கமைத்து ஏற்றிவரப்பட்டிருந்தனர்.
அவர்கள்
காணாமல்போனவர்களின் உறவினர்கள் நடத்திய
போராட்டத்தை குழப்ப முற்பட்டதுடன், போராட்டத்தில் கலந்து
கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசியல்
பிரமுகர்களை அவதூறாகப் பேசியதுடன் பெரும் கூச்சலிட்டுக்
கத்திக் கொண்டு
நின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த
இடத்திற்கு அவர்களுடன் பேச சென்றிருந்த நிலையில்
அங்கிருந்த முதியவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரை
தாக்க முற்பட்டார்.
இந்நிலையில் பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில்
பொலிஸார் ஒருவர்
நாடாளுமன்ற உறுப்பினரின் தோளில் கைபோட்டு இழுத்தமையினால்
நாடாளுமன்ற உறுப்பினர் அந்த பொலிஸாருடன் தர்க்கப்பட்ட
நிலையில் அவர்
தன்னுடைய தொப்பியையும்,
துப்பாக்கியையும் கொடுத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க
முயன்றார்.
எனினும்
அதற்குள் அங்கிருந்த
ஏனைய பொலிஸார்
மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினரின் பாதுகாவலர் ஆகியோர் குறித்த முரண்பாட்டை
தடுத்துவிட்டனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
இங்கே கிளிக் செய்து வீடியோ காட்சியைக் காணமுடியும்
0 comments:
Post a Comment