இன்று இந்தியாவில்
உருவான தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக
பதவியேற்ற முதல் நாளே
சர்ச்சையில் சிக்கிய சந்திரசேகர் ராவ்
இந்திய
நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா
மாநிலம் இன்று
உருவானது. முதல்
முதல்வராக தெலங்கானா
ராஷ்ட்ரிய சமிதி
கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் பதவியேற்றார்.. அவருடன்
11 பேர் அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதில்
அவர் மகன்
கே,டி,
ராமராவ், மருமகன்
ஹரீஸ்ராவ் உள்ளிட்டோர்
அடங்கியுள்ளனர். இவர்கள் வேலமா பிரிவினைச் சார்ந்தவர்கள்.
சந்திரசேகர் ராவின் அமைச்சரவையில் ரெட்டி பிரிவைச்
சேர்ந்த 4 பேர்
இடம் பெற்றுள்ளர்.
3 அமைச்சர்கள்
பிற்படுத்தப்பவர்கள். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ஒருவர் மற்றும் தலித்
பிரிவைச் சேர்ந்த
ஒருவர் அமைச்சரவையில்
இடம் பெற்றுள்ளனர்.
பெண்கள் யாரும்
அமைச்சரவையில் இடம்பெறவில்லை. முதல்வராக பதவியேற்ற சந்திரசேகர்
ராவ் மகன்
மற்றும் மருமகனை
அமைச்சரவையில் சேர்த்து கொண்டது பெரும்
சர்ச்சையை கிளப்பியுள்ளதாக
இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
0 comments:
Post a Comment