முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை  எதிர்த்து
யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்

கொழும்பு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தியிருக்கின்றன.
அளுத்கம, பேருவளை பகுதிகளில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 3தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 100 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், பல கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன  இணைந்து யாழ்.மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுடன்  யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரையில் இப்போராட்டம் இடம்பெற்றது

Ø  உடைக்காதே உடைக்காதே வழிபாட்டு தலங்களை உடைக்காதே,
Ø  நேற்று தமிழின அழிப்பு இன்று முஸ்லிம்கள் அழிப்பா?
Ø  முஸ்லிம் அமைச்சர்களே! இன்னுமா அரசாங்கத்துடன் சல்லாபம்?
Ø  முஸ்லிம்களின் பெருளாதாரத்தை நசுக்காதே.
Ø  அரசே! உன் நரபலிக்கு முஸ்லிம் பாலகனும் வேண்டுமா?
Ø  சிறிலங்கா இராணுவமே முஸ்லிம் பிரதேசங்களை விட்டு வெளியேறு,


என்பன போன்ற பதாகைகளைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்   ஏந்திக்கொண்டு  கோஷங்களையும் எழுப்பினர்









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top