யாழ் பல்கலைக்கழக
தொழுகை அறையில் கழிவு ஒயில்!
இன்று
ஜும்ஆ தொழுகையும் இடம்பெற்றது
சிகான் பாறூக்
யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகத்தில் உள்ள முஸ்லீம்
மாணவர்களின் தொழுகை அறை மீது இன்று 20 ஆம்
திகதி காலை இனந்தெரியாத நபர்களினால் கழிவு
ஒயில் வீசப்பட்டுள்ளது.
சம்பவ
இடத்திற்கு சென்றபோது அங்கு 3 பைகளில் கொண்டுவரப்பட்ட
ஒயில் பரவலாக
தொழுகை அறையின் மீது விசிறப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அவ்விடத்தில்
முஸ்லீம் மாணவர்
அமைப்பு (மஜ்லீஸ்)
அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு
இத்
தொடர்பில் விளக்கமளித்து கொண்டிருந்தார்கள்.
அவ்வேளை
அவ்விடம் வந்த
பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி தூய குமாராம்
என்று பெயர்
ஒயில் அடித்தவனுக்கு
சந்தோசம்.அடிவாங்கின
உங்களுக்கு வேதனை என்று கூறிச்சென்றார்.
இது
தொடர்பாக முஸ்லீம்
மாணவர்கள் பல்கலைக்கழக
நிர்வாகத்திடம் தெரிவித்த போது அரசியல் பிரச்சினையாக
இதனை மாற்ற வேண்டாம் எனவும் பாதுகாப்பு அதிகாரி
தெரிவித்த கருத்து
பல்கலைக்கழக நிர்வாகத்தின் கருத்தல்ல என கூறினர்.
இது
தான் தொடர்கதை
(இத்தொழுகை அறை ஆரம்பமானது முதல் 5 தடவை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)
இன்று
முதல் தடவையாக
யாழ் பல்கலைக்கழகத்தில்
ஜும்ஆ தொழுகையும்
இடம்பெற்றமை குறிப்பித்தக்கது.
0 comments:
Post a Comment