ஹலோ....!!!!
அவர்களும் சம்மாந்துறைதான், அவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.
மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்
நமது
சம்மாந்துறைக்குள் பல சின்னச்
சின்ன கிராமங்கள்
இருக்கின்றன. அவற்றுல் ஒரு கிராமத்தைப் பற்றியும்,
கிராம மக்களைப்
பற்றியும்தான் உங்களோடு ஒரு சில விடயங்களை
சுட்டிக்காட்ட இருக்கின்றேன், அந்தக் கிராமம்தான் மஜீட்புரக்
கிராமம்.
நான்
தலைப்பில் சொன்ன
அந்த அவர்கள்
இந்த இவர்கள்தான்,
இந்தக் கிராமத்தில்
வசிக்கும் பொதுமக்கள்தான்.
இந்தக்
கிராமம் பல்வேறு
விடயங்களில் பின்தங்கி இருப்பதை என்னால் உன்னிப்பாக
அவதானிக்க முடிந்தது,
அவற்றுல் முக்கியமான
விடயம் கல்வி.
மஜீட்புரத்தில்
கிட்டத்தட்ட 17க்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரியைகளோடு,
250க்கும் மேற்பட்ட
மாணவ-மாணவிகளோடு
ஒரே ஒரு
பாடசாலை இயங்கிக்
கொண்டிருக்கின்றது, அதில் க.பொ.த சாதாரண தரம்
வரைக்கும்தான் வகுப்புக்கள் இருக்கின்றது.
இவ்வாறான கல்விச்
சூழல் இங்கே
இருந்தாலும் மாணவர்கள் கல்வியில் பாரிய அளவு
பின் தங்கியேதான்
இருக்கின்றார்கள்.
இதற்குக்
காரணம்;
01. கற்றல் தொடர்பாக மாணவர்களுக்கும் அவர்களது
பெற்றோர்களுக்கும் போதிய அளவு
விழிப்புணர்வு ஊட்டப்படாமை
02. இளவயதுத் திருமணம் மற்றும் வறுமை.
03.சரியான
சட்டதிட்டங்கங்களோடு ஒரு கட்டுக்
கோப்பாக பாடசாலை
நிர்வாகம் இல்லாமை.
04.ஓ.எல் பரீட்சையில்
மாணவர்கள் சித்தி
அடைந்தாலும் அவர்கள் ஏ.எல். படிப்பதற்கான
உயர்தர வகுப்புக்கள்
பாடசாலையில் ஆரம்பிக்கப்படாமை.
05. பகுதி நேர வகுப்புக்கள் செல்வதற்கான
போதிய நிலையங்கள்
இல்லாமை.
06. போக்குவரத்துப் பிரச்சினை.
இவ்வாறான
பிரச்சினைகளையும், சூழலையும் சரியாக
ஆராய்ந்து, மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் சரியான
விழிப்புணர்வு ஊட்டி, கற்றல் கற்பித்தல்களுக்கு சரியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க
அந்தக் கிராமத்தில்
எந்த வித
சமூக நல
அமைப்புக்களோ, அரசசார்பற்ற நிறுவனங்களோ, அரசியல்சார்ந்தவர்களோ, சமூகநல ஆர்வலர்களோ இல்லை, எல்லோரும்
தான் உண்டு
தன் வேலை
உண்டு என்ற
மனோநிலையில்தான் இருக்கின்றார்கள்.
மஜீட்புரம்
என்பது வேற்றுார்
கிடையாது, இது
சம்மாந்துறைப் பிரிவுக்குட்பட்ட ஒரு குட்டிக் கிராமம்,
நமது சம்மாந்துறையில்
உள்ள நமது
மஜீட்புர கிராமத்தில்
காலத்தின் தேவையாக
இருக்கின்ற இத்தகைய விடயங்களுக்கு யார் முன்னின்று
நிற்பது...??? நிச்சயமாக நாம்தான். அது நமது
கிராமம், அங்கேயும்
நமது மாணவர்கள்தான்
படிக்கின்றார்கள், நமது சகோதர
சகோதரிகள்தான் வசிக்கின்றார்கள்.
இவர்களுக்குத்
தேவையான விழிப்புணர்வூட்டல்களையும்,
சேவைகளையும் நாம்தான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
ஆகவே..சம்மாந்துறையில் உள்ள
சமூகசேவை அமைப்புக்களே..!!!
சங்கங்களே..!!! அரசசார்பற்ற நிறுவனங்களே..!!!
கல்விமான்களே..!!! புத்திஜீவிகளே..!!! உங்களது காத்திரமான நடவடிக்கைகள், சேவைகள்,
நற்பணிகள் போன்றவற்றை
நமது மஜீட்புர
கிராமத்துக்கும் வழங்குங்கள், அந்த மாணவர்களும் கல்வியில்
எழுச்சி அடைய
உங்களது காத்திரமான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
அவர்களும்
சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள்தான், அவர்களையும்
கொஞ்சம் கவனியுங்கள்.
மக்கள்
நண்பன் சம்மாந்துறை
அன்சார், இலங்கை.
0 comments:
Post a Comment