கெளதம புத்தருக்கு ஞானம் கொடுத்த
போதி மரத்தின்
கிளை முறிந்தது!
புத்தகயாவில் புத்த பெருமான்,
49 நாட்கள் தவம் இருந்து
ஞானம் பெற்ற
போதி மரத்தின்
ஒரு கிளை
முறிந்து விழுந்தது. மன்னர்
வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து புத்த மதத்தை
தோற்றுவித்தவர், கௌதம புத்தர். கயாவில் உள்ள
போதி என்ற
இடத்தில் ஒரு
மரத்தின் கீழ்
49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்ற
புத்தப் பெருமான்,
உத்தரப் பிரதேசம்
மாநிலம், வாரணாசி
மாவட்டம், சாரநாத்
என்ற இடத்தில்
தனது பிரதம
சீடர்கள் ஐவருக்கு
’தர்ம சக்கரம்’
என்னும் ஞான
உபதேசத்தை சுமார்
2500 ஆண்டுகளுக்கு முன்னர் போதித்தார்.
அவர் ஞானம் பெற்றதாக
நம்பப்படும் புத்தகயாவில் உள்ள போதி மரத்தின்
ஒரு கிளையை
அசோகப் பேரசரின்
மகளான சங்கமித்திரை
இலங்கைக்கு கொண்டு சென்று நட்டு, வளர்த்ததாக
வரலாற்று குறிப்புகள்
கூறுகின்றன. அந்த மரத்தில் இருந்து
கொண்டு வரப்பட்ட
ஒரு கிளை
புத்தர் முதன்முதலாக
ஞான உபதேச
பிரசாரம் செய்த
சாரநாத்தில் உள்ள மலகந்தகுத்தி புத்த விகாரை
வளாகத்தில் நடப்பட்டு, அந்தக் கிளை பல்கிப்
பெருகி பெரிய
மரமாக வளர்ந்திருந்தது. முதிர்ச்சியடைந்திருந்த
அந்த போதி
மரத்தின் ஒரு
கிளை முறிந்து
விழுந்தது. கிளையின் உள் தண்டு சக்தியிழந்து
விட்டதால் அது
முறிந்து, விழுந்ததாக
குறிப்பிட்ட புத்த பிக்குகள் பூஜைக்கு
பின்னர் கிளையை
அறுத்து வெளியேற்றினர். மரக்
கிளை முறிந்ததில்
மடத்தின் சுற்றுச்சுவரின்
ஒரு பகுதி
மற்றும் ஆறு
தர்ம சக்கரங்கள்
உடைந்துள்ளனஎனத் தெரிவிக்கப்பட்டது.. உள்நாடு
மற்றும் வெளிநாடுகளில்
இருந்து சாரநாத்
செல்லும் புத்த
மதத்தைச் சேர்ந்தவர்கள்,
இந்த புனித
மரத்தை வலம்
வருவதை, தங்களது
தர்மமாகக் கொண்டு
உள்ளனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment