பேஸ்புக்கில் இழிவான படங்கள்
மென் பொறியாளர் ஷேக் மொகாசின் சாதிக் பதிவேற்றம் செய்யவில்லை
காவல்துறை அதிகாரிகள் தகவல்.
மகாராஷ்டிராவில்
சமூக வலை
தளத்தில் பால்
தாக்ரே குறித்து
சர்ச்சைக்குரிய வகையில் படம் வெளியிட்டது தொடர்பாக ஷேக் மொகாசின் சாதிக்
என்ற மென்
பொறியாளர் ஒருவர்
அடித்துக்கொல்லப்பட்டார் அல்லவா?
இதுதொடர்பாக
இந்து அமைப்புடன்
தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17
பேர் கைது
செய்யப்பட்டனர்.
பின்னர் பேஸ்புக்கில் இழிவான படங்களை மென் பொறியாளர் ஷேக் மொகாசின் சாதிக் பதிவேற்றம் செய்யவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே,
இதுகுறித்து விரிவான அறிக்கை வழங்குமாறு, மகாராஷ்டிரா
அரசிற்கு மத்திய
உள்துறை அமைச்சகம்
கேட்டுக்கொண்டிருந்தது. மாநில அரசும்,
அறிக்கையை தாக்கல்
செய்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் போதிய
விபரங்கள் இல்லை
என்றும், இது
தங்களுக்கு அதிருப்தியளிப்பதாகவும் மத்திய உள்துறை
அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் இது
தொடர்பாக விரிவான
விளக்கம் வேண்டும்
என்றும் மத்திய
உள்துறை அமைச்சகம்
கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment