ஐ.நா.வுக்கான மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக
ஜோர்டன் தூதர் செயித்
அல் ஹுசைன் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக ஜோர்டன் தூதர் செயித் அல் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய
நாடுகள் சபையின்
மனித உரிமைகள்
ஆணையத்தின் தலைவராக இருந்த தென்னாப்பிரிக்காவின் நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம்
கடந்த 2012ஆம்
ஆண்டுடன் முடிவடைந்த
நிலையில், அவருக்கு
2 ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்த
நிலையில் தற்போது
ஐ.நா.வுக்கான ஜோர்டன்
நாட்டின் தூதர்
செயித் அல்
ஹுசைன், ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையத்தின்
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பு
நாடுகளின் பிராந்திய
தலைவர்களின் ஆலோசனைக்கு பிறகு, ஐ.நா. மனித உரிமை
கவுன்சிலின் புதிய ஆணையர் பதவிக்கு ஜோர்டன்
நாட்டுக்கான தூதர் பிரின்ஸ் செய்து ராத்
அல் ஹூசைனை முன்மொழிவதாக
ஐ.நா
பொதுச் செயலாளர்
பான் கி
மூன் தெரிவித்துள்ளார்.
50 வயதாகும்
அல் ஹுஸைன் ஜான் ஹாப்கின்ஸ்
பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றார்.
பின்னர் கேம்ப்ரிட்ஜ்
பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம்
பெற்றார். தற்போது
அவர் ஜோர்டன்
நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர
தூதராக இருக்கிறார்.
0 comments:
Post a Comment