அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் !
( மக்கள் நண்பன்
)
அளுத்கம,
பேருவளை போன்ற
பிரதேசங்களில் ஏற்பட்ட இனக்குரோத வன்செயல்கள் காரணமாக
ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்கள் மாத்திரமல்லாது, உலக
நாடுகளும் தங்கள்
வெறுப்பை காட்டியவண்ணம்
இருக்கும் இத்தருவாயில்,
உலமா
கட்சியின் தலைவரும்,
மௌலவியுமான முபாரக் அப்துல் மஜீட் அவர்கள்
இத் தருவாயை
உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டு
அரசியல் செய்து
கொண்டிருப்பதை அவரது அனைத்து முகநுால் இடுகைகளிலும்
இருந்து காணக்
கூடியதாக இருக்கின்றது.
ஒரு
அரசியல்வாதியானவர் ஏனைய எதிரணிக்
கட்சிகளை விமர்சிப்பதென்பது
வழமையானதொரு விடயமென்று இதனை கண்டு கொள்ளாது
இருந்து விடலாம்.
ஆனால்
பழைய குருடி கதவ தொறடி என்ற
கதையாக அடிக்கடி
காலநேரம் தெரியாமல்
அவர் முஸ்லிம்
காங்கிரஸையும் அதன் தலைமத்துவத்தையும் விமர்சித்து எரிச்சலுாட்டிக்
கொண்டே இருக்கின்றார்.
அளுத்கம
வன்செயல்களுக்கு முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமத்துவத்தையும்
விமர்சிக்கும் மௌலவி முபாரக் அப்துல் மஜீட் அவர்கள் அவரது உலமாக் கட்சி மூலமாக அளுத்கமயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்...???? நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறாரா...??? சேதமடைந்த இடத்தை சென்று பார்வையிட்டு அனுதாபம்தான் தெரிவித்திருக்கிறாரா...???
இந்த
சம்பவம் நடைபெற்றதில்
இருந்து இந்நேரம்
வரைக்கும் முஸ்லிம்
காங்கிரஸையும், அதன் தலைமைத்துவத்தையும் பற்றி விமர்சித்துக்
கொண்டேதானே இருக்கின்றார்.
உங்கள்
அரசியல் சண்டைகளையும்,
குற்றச் சாட்டுக்களையும்,
குறை கூறல்களையும்,
விமர்சனங்களையும், தனிப்பட்ட மற்றும்
பொதுக் குரோதங்களையும்
வேறு எங்காவது
வைத்துக் கொள்ளுங்கள்
தயவு செய்து
அளுத்கம வன்
செயலை இதற்கு
பயண்படுத்தாதீர்கள்.
இதனை
நான் கட்சிசார்ந்தோ,
கொள்கைசார்தோ, அரசியல்சார்ந்தோ கூறவில்லை மாறாக ஒரு
பொதுமகனாக இருந்து
அண்மைக்காலமாக உங்கள் போக்கை அவதானித்து உங்கள்
நோக்கை தெரிந்து
கொண்டுதான் கூறுகின்றேன். தயவு செய்து இதனை
வைத்து அரசியல்
ஆதாயம் தேடாதீர்கள்,
உங்கள்
பகைமைகளை மறந்து
, கட்சிபேதமின்றி முஸ்லிம்கள் என்ற நாமத்தோடு அளுத்கம
மற்றும் பேருவளை
சம்பவங்களுக்கு உங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,
அல்லாஹ் உங்களுக்கு
அருள் புரிவான்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை
அன்சார்
இலங்கை.
0 comments:
Post a Comment