பாடசாலைப் பரிசளிப்பு
விழாவில்
அரைக் கம்பத்தில் பறந்த தேசியக் கொடி!
பொதுவாக
துக்ககரமான சம்பவங்களின்போதே தேசியக் கொடியை அரைக்
கம்பத்தில் பறக்கவிடுவது வழமை.
ஆனால்
கல்முனை வலயத்தில்
உள்ள பிரபல
பாடசாலை ஒன்றின்
வருடாந்த பரிசளிப்பு
விழாவின்போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில்
பறக்கவிடப்பட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சம்பவம்
தொடர்பாக அறியவருவதாவது:
குறித்த
பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கு வருகை
தந்திருந்த பிரதம அதிதி தேசியக் கொடியை
ஏற்றும் சமயம்
கொடி கழன்று
கம்பத்தின் அரைவாசியில் கட்டப்பட்டிருந்த
தடையில் தங்கி
காணப்பட்டுள்ளது.
இதனை,
தொடர்ந்தும் ஏற்ற முடியாத நிலை காணப்படவே,
கொடி அரைக்
கம்பத்தில் பறந்த நிலையிலேயே தேசியக் கீதமும்
இசைக்கப்பட்டுள்ளது.
இதனால்
வைபவத்தில் கலந்துகொண்ட அதிதிகள் தர்ம சங்கடமான
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது அதிதிகளையும்,
தேசியக் கொடியையும்
அவமதிக்கும் செயலாக பலராலும் பேசப்பட்டது.
இதே
போன்ற ஒரு
நிலை, சில
ஆண்டுகளுக்கு முன்னர் கல்முனை மாநகர சபையில்,
முதல்வர் பதவியேற்பின்
போதும் நிகழ்ந்தது.
இந்த மாநகர
சபையில் சாரணீயம்
தெரிந்த ஒருவரும்
இல்லையா? என
அப்போது பலரும்
பேசிக் கொண்டனர்.
ஆனால்
இன்று, இப்பாடசாலையில்
சாரணீய மாணவர்களால்
அதிதிகளுக்கு வரவேற்பு
வழங்கப்பட்டும் இது நிகழ்ந்துள்ளதென்றால்! இதன் பின்புலம்
என்ன என்று
பலரும் குறை
பட்டுக்கொண்டனர்.
இங்கு
அதிபர் உரையாற்றுகையில்:
" நான் வேறு ஒரு ஊரைச் சேர்ந்தவன் என்று இங்குள்ள சிலர் நினைக்கின்றார்கள். அவர்கள் கூறுகிறார்கள் எனது ஊர் பாடசாலைகளை நான் ஒரு கண்ணாலும், இப்பாடசாலையை வேறு கண்கொண்டும் பார்ப்பதாக. அது அவ்வாறு அல்ல. நான் இப்பாடசாலையில் இருக்கும்வரை இப்பாடசாலையை எனது உயிர் மூச்சாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இதை எவரும் தவறாக எடை போடவேண்டாம்"
எனக் கேட்டுக்
கொண்டார்.
இதன்
மூலம் புலனாவதென்ன.
இப்பாடசாலையை கொண்டு நடாத்த இங்குள்ள சில
சக்திகளின் இடையூறுகள் தடையாக இருப்பதை அதிபர்
சிலேடையாக குறிப்பிட்டுள்ளார்
அல்லவா?
அதேவேளை,
இன்று புதன்கிழமைநாளை
இவ் விழாவிற்காக,
விழா ஏற்பாட்டுக்குழு
தெரிவு செய்திருக்கிறது.
இலங்கையில் புதன்கிழமை பொதுமக்கள் தினம். அரச
அதிகாரிகள் அனைவரும் இன்றைய தினம் தத்தமது
அலுவலகங்களில் இருக்கவேண்டிய ஒரு நாள். ஆகையால்
என்னவோ இவ்விழாவுக்கு
வருகை தந்த
பிரதேச செயலாளரும்
விழா ஆரம்பித்த
மாத்திரத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அழைப்பிதழில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தும்,
வலயக் கல்விப்
பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் போன்றோரும்
இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. இவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு
புதன்கிழமை பொதுமக்கள் தினம் என்பது தெரியாதா?
அல்லது இவர்கள்
கலந்துகொள்ளக் கூடாதென்பதற்காக திட்டமிட்டு
இடம்பெற்ற சதியா?
அத்தோடு
இவ் விழாவிற்கான
அழைப்பிதழில் விழா நடைபெறும் இடம்
கல்லூரி
பிரதான கேட்போர்கூடம்
எனக் குறிப்பிடப்
பட்டுள்ளது.
குறித்த
மண்டபத்துக்கு, கல்லூரிக்கு காரண கர்த்தாவான முக்கியஸ்தர்
ஒருவரது பெயர்
தொன்றுதொட்டு இருந்து வரும் நிலையில்.
விழா
ஏற்பாட்டுக் குழுவால் இப் பெயர் இருட்டடிப்புச்
செய்யப்பட்டது ஏன்?
கடந்த
வாரம் கொழும்பில்
இடம்பெற்ற இக்கல்லூரியின்
பழைய மாணவர்
சங்கக் கொழும்புக்
கிளைக் கூட்டத்தில்
இம்முக்கியஸ்தர் நினைவு கூரப்படவில்லை என அவரது
புதல்வியால் குறை கூறப்பட்டிருந்தது சகலரும் அறிந்ததே.
இந்நிலையில் இப் பெயர் இருட்டடிப்பானது எதனைக்
கூற விளைந்திருக்கின்றது?
மேலும்
இன்று பாடசாலையின்
156 ஆசிரியர்களின் பெயர்களும் கௌரவிப்புக்காக
விழா மேடைக்கு
அழைக்கப் பட்டிருந்தும்
சில ஆசிரியர்கள்
பிரசன்னமாயிருக்கவில்லை. இவ்வாறு பிரசன்னமாகாத
ஆசிரியர்களில் சிலரை பாடசாலை வளாகத்துக்குள்
அவதானிக்கவும் முடிந்தது.
இச்செயற்பாடானது
பாடசாலை ஆசிரியர்களிடையே
இன்னமும் குழுநிலை
ஆதிக்கங்கள் நிலவுவதையே அவதானிக்கவும் முடிந்தது. இது
போன்ற
செயற்பாடுகள் மேற்கூறிய அதிபரின்
பேச்சுக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைகின்றன.
அதேவேளை
பிரதம அதிதி
தமது உரையில்
"இவ்விழாவை, இவ்வாறு நடாத்தவேண்டும் என தம்மை வேண்டிக் கொண்ட, பாடசாலையின் மகாசங்க உறுப்பினர்கள் எனத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டவர்களின் முகங்களை இங்கு காணவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது
போன்ற செயற்பாடுகள்,
பாடசாலையையும், அதன் அதிபரையும் வெளி உலகுக்கு
தவறாக சித்தரித்துக்
காட்ட, பாடசாலையில்
இருந்து செயற்படும்
ஒரு சிலரின்
திட்டமிட்ட சதிகளக இருக்கலாம் என பலரும்
பேசிக் கொள்கின்றனர்.
இப்பிரதேசத்தின் முதுகெலும்பான குறித்த பாடசாலை சிலகாலம் இருண்ட யுகத்தில் இருந்து, புதிய அதிபரின் வருகையுடன் ஒரு ஒளிக் கீற்றை நோக்கி நம்பிக்கையுடன் கால் எடுத்து வைக்கும் இத்தறுவாயில் இவ்வாறான கால் வருடல்களை அங்கீகரிக்கத்தான் முடியுமா?
எனவே இப்பாடசாலையில் அக்கறை கொண்ட அதிகாரம் படைத்த தரப்பினர் இப் பாடசாலையின் சீரான பயணத்துக்கு இடையூறாகக் காணப்படும் இதுபோன்ற தடைக்கற்களை விலக்கி விடுவார்களேயானால், அவர்கள் இப்பாடசாலைக்கு செய்யும் உதவியானது, ஒரு மகன் தாய்க்கு செய்யும் உதவிபோன்றதாகும்.
நன்றி கலசம்.கொம்
0 comments:
Post a Comment