அட்டாளைச்சேனையில்  
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்!

(ஆதம்பாவா முகம்மது பறக்கத்துள்ளா)

அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அட்டாளைச்சேனையில் அமைதி ஊர்வலம் ஒன்று இன்று 19 ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஊர்வலத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் .எல்.எம். நஸீர், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆதம்பாவா முகம்மது பறக்கத்துள்ளா உட்பட பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் வழங்கிக் கொண்டிருந்தபோது அங்கு விரைந்த விஷேட அதிரடிப்படியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரமுகர்கள் மற்றும் மக்கள்  மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இத்தாக்குதலில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்..எம். அன்சிலும்  தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top