முஸ்லிம் உரிமைகளுக்கான
அமைப்பு
Muslim
Rights Organization
ஹர்த்தாலின் வெற்றிக்கு
ஒத்துழைத்தோர்க்கு நன்றி
அண்மையில்
அளுத்கம, பேருவள பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலைக் கண்டித்தும் இடம்பெற்ற கொலை, கொள்ளை, தீவைப்பு
போன்ற நாசகார செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் இடம்பெற்ற
நாடாளாவிய ரீதியிலான ஹர்த்தால் கடையடைப்பிற்கு பூரண ஒத்துழைப்பு தமிழ், முஸ்லிம் சமுகத்திற்கு
எமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முப்பதாண்டு
கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாகவும் சிறுபான்மை சமுகங்கள் சிறந்த முறையில்
உரிமைகள் பெற்று வாழ்வதாகவும் வெளி உலகிற்கு கூறிவரும் அரசாங்கம் வாயளவில் ஜனநாயகத்தைப்
போதிக்கும் அரசு என்பதை சிறுபான்மை தொடர்பான அதன் நிலைப்பாடுகள் நிருபிக்கின்றன.
பொது
பல சேனா போன்ற இனவாதிகள் அரச அணுசரணையில் இயங்குவது அந்த இயக்கம் அதிகாரத்தைக் கையிலெடுத்து
செயற்படுவதன் மூலம் புரியக் கூடியதாக இருக்கிறது. பொது பல சேனாவின் அராஜகங்களை அரசாங்கம்
தட்டிக் கொடுத்து வளர்த்து வருகின்றது.
இடம்பெற்ற
கொலை, கொள்ளை, தீவைப்புச் சம்பவங்களில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்களை அரசாங்கம் இன்னும்
கைது செய்யாமலிருக்கிறது. இவற்றை முன்னிறுத்தியே எமது அமைப்பு ஹர்த்தாலுக்கான அழைப்பை
முன்வைத்தது.
இந்த
ஹர்த்தாலைத் தடுப்பதற்கு காவல்துறை பலத்த முயற்சியை மேற்கொண்டது. கொழும்பிலும் ஏனைய
நகரங்களிலும் காவல்துறையினர் கடை கடையாகச் சென்று மக்களை அச்சுறுத்தி கடைகளை திறக்குமாறு
பணித்த போதும் அவற்றுக்கு செவி சாய்க்காமல் தமது கடைகளை மூடி ஹர்த்தாலை வெற்றியடையச்
செய்தனர். அரசாங்கத்தின் அத்தனை பொய்ப் பிரச்சாரங்களும் எடுபடாமல் போயின.
பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு என்று ஓர் அமைப்பு இல்லையென்றும்
இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பை யாரும் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று கூறியும் அவரின் கருத்தைத் தூக்கி எறிந்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கினர்.
இந்த ஹர்த்தாலின் வெற்றிக்காக எம்மோடு ஒத்துழைத்த மேல் மாகாண சபை அங்கத்தவர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, அர்சாட் நிஸாம்தீன், மனோகணேசன், மத்திய மாகாண சபை அங்கத்தவர் அசாத் சாலி மற்றும் நவ சமசமாஜ கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருனாரத்ன ஆகியோருக்கு எமது நன்றிகள்.
0 comments:
Post a Comment