சேம் சைடு கோல் அடித்த
பிரேசில் வீரர்
அணி வெற்றி பெற்று விட்டதால் தப்பினார்.
20-வது
உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலே சேம்சைடு கோலாகும். குரோஷியாவுக்கு எதிரான
தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் மார்சிலோ சேம்சைடு கோல் அடித்தார். 11-வது நிமிடத்தில்
குரோஷியாவின் இவிகா ஒலிக் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது பந்து அவரது காலின் ஓரத்தில்
பட்டு கோல் எல்லைக்கு நுழைந்தது. இதை எதிர்பாராத அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.
நல்ல
வேளையாக பிரேசில் அணி வெற்றி பெற்று விட்டதால் மார்சிலோ தப்பினார். உலக கோப்பை கால்பந்தில்
அடிக்கப்பட்ட 37-வது சேம்சைடு கோல் இதுவாகும்.
1994-ம்
ஆண்டு உலக கோப்பை போட்டியில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் எஸ்கோபர்
சேக்சைடு கோல் அடித்தார். இந்த சேம்சைடு கோலால் கொலம்பியா தோற்றது. இதனால் ஆத்திரம்
அடைந்த அந்நாட்டு ரசிகர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment