அநியாயத்துக்காக அவர்கள் ஒன்று
சேர்கிறார்கள்...
நியாயத்துக்காக கூட எம்மவர் பிரிந்தே நிற்கின்றனர்
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
மதிப்புக்குரிய
முஸ்லிம் அமைச்சர்களே
முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்களே, முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும்
கட்சிகளின் தலைவர்களே முக்கியஸ்தர்களே!
எனது
இந்த மன்றாட்டமான
வேண்டுகோளுக்குச் செவிமடுத்து எதனையாவது செய்யுங்கள்.
இன்று
எமது சமூகம்
எதிர்கொண்டுள்ள துன்பமான நிலைமைகளின் போது உங்களை
அரசாங்கத்திலிருந்து விலகுமாறோ அல்லது
அமைச்சுப் பதவிகளை
விட்டு விலகுமாறோ
நான் கேட்கவில்லை.
இன்றைய சூழ்நிலையில்
நீங்கள் அரசிலிருந்து
விலகுவதால் எம்மவர் நிலைமை மேலும் மோசமடைந்து
எதிரிகளுக்கு அதிக சந்தர்ப்பத்தினை வழங்குவதாகவே அமைந்து
விடும். அதே
போன்று நீங்கள்
விலகினால் அதன்
காரணமாக அரசு
கூட உங்கள்
மீது வெறுப்படையலாம்
அதனாலும் பாதிப்பு
எமது சமூகத்துக்கே!
கௌரவ
அமைச்சர் ரவுப்
ஹக்கீம் அவர்கள் !
இன்று வரை அமைச்சராக இருப்பதன் காரணமாகவே இன்று வெளிநாட்டு ராஜதந்திரிகளும் முக்கியஸ்தர்களும் அவரை தேடிச் சென்று சந்தித்து நிலைமைகளைக் கேட்டறியக் கூடியதாக உள்ளது. அதே போன்று அவராலும் விளக்கமளிக்க முடிகிறது. இதன் காரணமாகவே இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சர்வதேசம் கூட எமக்காக இன்று விழித்துக் கொண்டுள்ளது.

ஆனால்,
அமைச்சர் ஹக்கீம்
அவர்கள் தனது
அமைச்சுப் பதவியை
ராஜினாமாச் செய்திருந்தால் அவரை எந்த ராஜதந்திரியும்
சந்திருக்கும் வாய்ப்பானது மிக அரிதாகவே இருந்திருக்கும்.
எனவே, எனது
பார்வையில் அமைச்சர் ஹக்கீமோ அமைச்சர் ரிஷாத்தோ
பதவி விலகக்
கூடாது. இன்று
எமக்குள்ள ஒரே
பலம் முஸ்லிம்
தலைமைகள் அல்ல...
அவரகள் வகிக்கும்
அமைச்சுப் பொறுப்புகளின்
சர்வதேச பெறுமானமே!
எனவே, இந்த
விடயத்தில் நாம் தெளிவு கொள்ள வேண்டும்.
ஆனால்,
மதிப்புக்குரிய முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும்
கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்களிடம்
நான் கேட்பது
என்னவென்றால் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, விமர்சனங்களுக்கு
அப்பால் நீங்கள்
அனைவரும் ஒரே
கட்சியின் கீழ்
ஒன்றிணந்து செயற்படுங்கள். அதுவே, எமது சமூகத்துக்கு
மாபெரும் சக்தியாகவும்
இன்றைய, நாளைய
காலங்களின் தேவையாகவும் பலமாகவும் இருக்கும். அப்படி
ஒன்றிணைவதன் மூலமே ஆட்சியாளர்களையும் உங்களால் நடுங்க
வைக்க முடியும்.
ஆனால்,
நீங்கள் அனைவரும்
பிரிந்து நின்று
ஒரே நோக்கத்துக்காக
எத்தனைதான் அறிக்கைகளையும் கண்டனங்களையும்
விட்டாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அதேவேளை,
ஒற்றுமையாக ஓரணியில் நின்று ஒரு விடயத்துக்காக
ஓர் அறிக்கை
மட்டும் விடுங்கள்..
உங்கள் குரலும்
எவரெஸ்ட் சிகரத்தையும்
தொட்டு அதனை
அதிர வைத்து
விடும்.
வெவ்வேறுபட்ட
கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டுள்ள சிங்கள இனவாத
அமைப்புகளான பொதுபலசேனா, சிஹல ராவய, சிங்கள
ராவய, ராவண
பலய போன்ற
பல அமைப்புகள்
முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் என்று வரும்
போது எவ்வளவு
அழகாக ஒற்றுமைப்படுகிறார்கள்.
எமக்கு எதிரான
அநியாயங்களைக் கூட்டாக நின்று கச்சிதமாகச் செய்து
முடிக்கிறார்கள். ஆனால், நீங்கள் முஸ்லிம்களுக்கு அநியாங்கள்
என்று வரும்போது
கூட ஐக்கியப்படாமல்
பிரிந்து நின்றே
செயற்படுகின்றீர்கள். இதுதான் அவர்களுக்கும்
உங்களுக்கும் உள்ள வித்தியாசம். இந்த விடயத்தில்
அவர்களிடம் நீங்கள் பாடம் கற்க வேண்டும்.
ஒரே விடயத்துக்காகப் பிரிந்து நின்று ஆயிரம் குரல்கள் கொடுத்தாலும் அவைகள் சுவரில் எறிந்த பந்துகள் போன்று உங்களைத் தான் வந்தடையும். அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை ஆனால், நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தடவை மட்டும் கணீர் என்று குரல் கொடுங்களேன் பார்ப்போம். அந்தக் குரல் எவ்வளவு வலிமைமிக்கதாக இருக்கும் என்பதனை உணர்ந்து கொள்வீர்கள். அதன் மூலம் எமது சமூகமும் தைரியமடையும்... செய்வீர்களா?

0 comments:
Post a Comment