அளுத்கம சம்பவங்களை
எதிர்த்து
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப்
போராட்டம்!
முஸ்லிம்
மக்களுக்கு எதிராக அளுத்கம, பேருவள, தர்காடவுன் பகுதிகளில்
இடம்பெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்களை
எதிர்த்து இன்று
19 ஆம் திகதி
வியாழக்கிழமை ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்பு
போராட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
அளுத்கம
பகுதியில் முஸ்லிம்
மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கடந்த
15ம் திகதி
தொடக்கம் 3 தினங்கள் நடைபெற்றிருக்கின்றது.
இதில் 3 மாத
குழந்தை உட்பட
4பேர் உயிரிழந்துள்ளதுடன்
80ற்கும் மேற்பட்டவர்கள்
காயமடைந்தும், பல கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும்
உள்ளன.
இந்நிலையில்
மிக மோசமானதும்
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கும்
வகையிலும் அமைந்திருக்கும்
இந்தச் சம்பவம்
தொடர்பாக உரிய
நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
எதிர்காலத்தில்
இவ்வாறான வன்முறைச்
சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை
முன்வைத்து இன்று வியாழக்கிழமை நண்பகல் 12மணி
தொடக்க ம்
1 மணி வரையில்
குறித்தபோராட்டம் பல்கலைக்கழக வளாகத்திற்குள்
நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது/
இதில்
பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும்
சேர்ந்த மாணவர்கள்
ஆசிரியர்கள் ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டார்கள்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment