11 வயதுச் சிறுவனின் வாழ்நாள் ஆசை
ஒரு நாள் விமானியாக இருந்ததால் நிறைவேறியது

விமானப் படையின் ஒரு நாள் விமானியாக இருந்த 11 வயது முகிலேஷ், தனது வாழ்நாள் ஆசையை நிறைவு செய்து கொண்டார்.
 உடல் முழுவதும் பிராணவாயுவை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பணுக்களை அழிக்கும் "தலசீமியா' என்னும் ரத்த குறைபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள முகிலேஷ், தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

 உயிருக்கு மிகவும் ஆபத்தைத் தரும் ரத்தம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ள முகிலேஷ், விமானப் படையில் ஒரு நாள் விமானியாக இருக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். இந்த ஆசை  இந்தியாவிலுள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப் படை தளத்தின் மூலம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. அங்கு விமானப் படை விமானத்தில் விமானியின் இருக்கையில் முகிலேஷ் அமர வைக்கப்பட்டார். விமானத்தை எப்படி இயக்க வேண்டும் என்ற விஷயங்கள் அவருக்கு அனுபவப்பூர்வமாகக் கற்றுத் தரப்பட்டன. இதனால், மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்ற முகிலேஷுக்கு இது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும் எனவும், அதில் கிடைத்த அனுபவத்தை அவர் பல நாள்கள் சொல்லி மகிழ்வார் என்றும் முகிலேஷின் தாயார் கவிதா தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top