பாகிஸ்தானில் ரயில் ஆற்றுக்குள் விழுந்ததால்
12 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில்
இராணுவ வீரர்கள்
சென்ற சிறப்பு
ரயில் ஆற்றுக்குள்
விழுந்ததால், 12 வீரர்கள்
உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் புன்னோ
அகல் நகரிலிருந்து
குஜராத் நகரின்
கரியான் கான்ட்
ரயில் நிலையத்துக்கு
அந்த ரயில்
சென்று கொண்டிருந்தது. பஞ்சாப் மாகாணம், குஜ்ரன்வாலா
நகருக்கு அருகிலுள்ள
ஒரு பாலத்தைக்
கடந்தபோது, பாலம் இடிந்து அந்த ரயில்
ஆற்றுக்குள் விழுந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து
இராணுவ
மக்கள் தொடர்புப்
பிரிவு பொது
இயக்குநர் அசீம்
பாஜ்வா கூறியுள்ளதாவது:
இராணுவ வீரர்களை
ஏற்றி கரியான்
பகுதி நோக்கிச்
சென்று கொண்டிருந்த
சிறப்பு ரயில்,
ஜம்கே சாத்தா
பகுயிலுள்ள ஆற்றுப் பாலத்தைக் கடந்தபோது அது
இடிந்து விழுந்தது. இதில், அந்த சிறப்பு
ரயிலின் நான்கு
பெட்டிகள் ஆற்றுக்குள்
விழுந்தன. இந்த
விபத்தில் படைப்
பிரிவுத் தலைவர்
அமீர் உட்பட 12 இராணுவத்தினர் உயிரிழந்தனர்
என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில்
சிக்கிய 80 பயணிகள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு சதி
வேலை காரணமாக
இருக்கலாம் என ரயில்வே அமைச்சர் கவாஜா
ஸாத் ரஃபீக்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment